கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரை பொதுவெளியில் தூக்குலிட்டு, தாலிபான்கள் மரண தண்டனையை
நிறைவேற்றியுள்ளனர்.
மேற்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவருக்கு தலிபான் அரசு .08-12-2022.இன்று பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றியது என அதன்
செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ஆப்கனின் மேற்கு ஃபரா மாகாணத்தில், 2017ஆம் ஆண்டு ஒருவரை கத்தியால் குத்திக் கொன்றதாக
குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு இன்ரு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரிகிறது.
இதனை தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா
முஜாஹித் கூறினார் அறிவித்தார். இந்த அறிவிப்பின்போது, தாலிபன்களின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், கடந்தாண்டு ஆப்கானை கைப்பற்றிய தாலிபான், அதன்பின் முதல்முறையாக பொதுவெளியில் தூக்கு தண்டனை நிறைவேற்றியுள்ளது.
இந்த கொலை வழக்கு மூன்று நீதிமன்றங்களால் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது என்றும், தெற்கு காந்தஹார் மாகாணத்தைச் சேர்ந்த தாலிபனின் தலைவரால் இந்த தீர்ப்பு அங்கீகரிக்கப்பட்டதாகவும் தாலிபன் செய்தித்தொடர்பாளர் கூறினார். அந்த நபர் எப்படி தூக்கிலிடப்பட்டார் என்பது குறித்து அவர் எந்த தகவலும் அளிக்கவில்லை.
குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டபோது பல உயர்மட்ட தாலிபான் தலைவர்கள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இதில் தற்காலிக உள்துறை அமைச்சர் சிராஜுதீன் ஹக்கானி,
மற்றும் துணைப் பிரதமர் அப்துல் கானி பரதார், நாட்டின்
தலைமை நீதிபதி, வெளியுறவு அமைச்சர், கல்வி அமைச்சர் ஆகியோர் அடங்குவர்.
நாட்டின் உச்ச நீதிமன்றம், கொள்ளை மற்றும் பாலியல் தொழில் போன்ற குற்றங்களில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் மீது பகிரங்கமாக எச்சரிக்கை விடுவது சமீப காலங்களில்
அதிகமாகியுள்ளது. இந்த எச்சரிக்கைகளுக்கு நடுவே இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 1990களில் கொடுமையான
ஆட்சியளித்த தாலிபான்கள், மீண்டும் அதே காலகட்டத்தை பின்பற்ற வாய்ப்புள்ளது என்பதை இந்த தூக்கு தண்டனை சம்பவம் எடுத்துக்காட்டாக அமைகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் கடந்த மாதம் ஆப்கானிஸ்தானில் பொதுவெளியில் கசையடிகளை தண்டனயாக அளிப்பதை உடனடியாக நிறுத்துமாறு தாலிபான் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தாலிபானின் உயர்மட்ட மத தலைவர் நவம்பரில் நீதிபதிகளைச் சந்தித்து, ஷரியா சட்டத்தின்படி தண்டனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. தாலிபான்களின் முந்தைய 1996-2001 ஆட்சியின்கீழ் பொதுவெளியில் அடித்தல் மற்றும் கல்லெறிதல், மரணதண்டனைகள் ஆகியவை நடந்தன.
இத்தகைய தண்டனைகள் பின்னர் அரிதாகிவிட்டன. தாலிபானுக்கு அடுத்து ஆப்கனில் ஆட்சிக்கு வந்த வெளிநாட்டு ஆதரவு அரசாங்கங்களால் இந்த தண்டனைகளை கடுமையாக எதிர்த்தன. இருப்பினும் மரண தண்டனை ஆப்கானிஸ்தானில் சட்டப்பூர்வமான ஒன்றாகவே
இருந்து வருகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக