சட்டவிரோதமாக கப்பல் மூலமாக கனடா செல்ல முற்பட்டிருந்த இலங்கையர்கள் 300 பேர் வியட்நாம் அருகே படகு பழுதடைந்ததால விய்ட்நாமில் தங்க வைப்பட்டிருந்தனர்.இவ்வாறு அங்கு தஙகவைக்கபப்ட்டிருந்தவர்கள் நாட்டுக்கு அழைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்த நிலையில், நாட்டுக்கு தாம் மீளவும்
திருப்பி செல்ல
போவதில்லை என தெரிவித்து இருவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் அதில் யாழ் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்திருந்தார்.வியட்நாம் நாட்டில் மரணமடைந்த,சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் சடலம் சற்று முன்னர் விமானம் மூலமாக இலங்கைக்கு கொண்டு
வரப்பட்டிருக்கிறது.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.இதேவேளை உயிரிழந்தவரின் இறுதிக்கிரியைகள் நாளை யாழ்ப்பாணம் சாவகச்சேரி கல்வயலில் உள்ள அவரின் வீட்டில் நடைபெறும் என குடும்பத்தினர்
தெரிவிக்கின்றனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருகடியால் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், தங்களது பயண ஆபத்துக்களை அறியாது செல்வதனால் இவ்வாறான இழப்புக்களை நாம் சந்திக்கவேண்டியுள்ளது.அதேவேளை உயிரிழந்த கிரிதரன் மூன்று குழந்தைகளின் தந்தையாவார். வறுமையை போக்க தனது கணவர் வெளிநாடு செல்ல முயன்றதாக உயிரிழந்தவரின் மனைவி
தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அந்த பிஞ்சுக் குழந்தைகளின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.இந்நிலையில் குடும்ப கஸ்ரத்தை போக்கவென சட்டவிரோத வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வோர் இனியாவது அது தொடர்பில் சிந்தித்து செயலாற்றுவது, அவர்களது குடும்பத்தை நாட்டாற்றில் தவிக்க விடாது காப்பாற்றும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக