யாழ் ஊர்காவற்துறை பகுதியில் குளியலறை தண்ணீர் வாளிக்குள் விழுந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது.ஊர்காவற்துறை நாராந்தனை வடக்கை சேர்ந்த சபீசன் கென்சியால் எனும் ஒன்றரை வயது பெண்குழந்தையே உயிரிழந்துள்ளது.
04-12-2022.ஞாயிற்றுக்கிழமை பெற்றோர் வீட்டில் வழிப்பாட்டில் ஈடுபட்டிருந்த வேளை , விளையாடிக்கொண்டு இருந்துள்ளது.திடீரென குழந்தையை காணதமையால், பெற்றோர் தேடிய வேளை , குழந்தை குளியலறை தண்ணீர் வாளிக்குள் விழுந்த நிலையில் கண்டுள்ளனர்.
உடனே குழந்தையை மீட்டு , ஊர்காவற்துறை வைத்திய சாலையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு குழந்தை அனுப்பப்பட்டது.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி 06-12-2022.செவ்வாய்க்கிழமை அன்று உயிரிழந்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக