வலப்பனை கீர்த்தி பண்டாரபுர வழிவூடான கண்டி - பண்டாரவளை பிரதான வீதியின் ஹங்குராங்கெத்த காவல்துறை பிரிவுக்குட்பட்ட லெமசூரிய பகுதியில் பேருந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து.18-12-2022. இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
கண்டியிலிருந்து ஹங்குராங்கெத்த வழியாக பதுளையை நோக்கியும்,பண்டாரவளையிலிருந்து அதே வழியில் கண்டியை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து சம்பவித்த போது இவ்விரு பேருந்துகளிலும் பயணித்த பயணிகளில் 15 பேர் விபத்துக்குள்ளாகி பலத்த காயங்களுடன் கீர்த்தி பண்டாரபுர கழகத்தின் பிரதேச வைத்தியசாலைக்கும், ஒரு சிலர் வலப்பனை பிரதேச வைத்தியசாலைக்கும் கொண்டு செல்ப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேககட்டுப்பாட்டை மீறிய இவ்விரு பேருந்துகளும் மோதிக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக