siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 11 மார்ச், 2019

எருவன் பகுதியில் வீதியில் நடந்து சென்ற மூதாடி தாக்கப்பட்டார்

வீதியில் நடந்து சென்ற மூதாட்டியைத் தாக்கிவிட்டு அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
உறவினர் ஒருவரே இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் 09,03,2019, இரவு யாழ்ப்பாணம் கொடிகாமம் எருவன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியையான மூதாட்டி கொடிகாமத்தில் வைத்துத் தாக்கப்பட்டுள்ளார்.
அயலவர்களால் மீட்கப்பட்ட மூதாட்டி சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 10 மார்ச், 2019

யாழ் கைத­டி­யில் நவீன வச­தி­யு­டன்- கள்ளு விற்­பனை நிலை­யம்

யாழ்ப்­பா­ணம் கைதடிச் சந்­தி­யில் நவீன வச­தி­கள் கொண்ட கள்ளு விற்­பனை நிலை­யம் ஒன்றை சாவ­கச்­சேரி பனை தென்னை வள அபி­வி­ருத்­திக் கூட்­டு­ற­வுச் சங்­கம் அமைத்­துள்­ளது.
குடி­தண்­ணீர், மல­ச­ல­கூ­டம் மற்­றும் சுகா­தார வச­தி­களை உள்­ள­டக்­கி­ய­தாக இந்த கள்ளு விற்­பனை நிலை­யம் 20 லட்­சம் ரூபா செல­வில் அமைக்­கப்­பட்­ட­தாக சங்­கம் தெரி­வித்­தது.
புதி­தாக அமைக்­கப்­பட்ட இந்தக் கள்ளு விற்­பனை நிலை­யத்தை எதிர்­வ­ரும் 15 ஆம் திக­தி­ய­ள­வில் மக்­கள் பயன்­பாட்­டுக்­குத் திறந்து விட­வும் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது என்று 
தெரி­விக்­கப்­பட்­டது.
நம் நாட்டில் ஒரு சில நாட்டுச்சாராயங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. அது ஏன் தடை செய்யப்பட்டது!!!! சற்று சிந்தித்து பாருங்கள். வெளிநாட்டு சாராயத்தை உள்நாட்டில் விற்பனை செய்வதற்காக சில பெரியவர்கள் எடுக்கும் முடிவாகவும் இருக்கலாம்.  இதை தடுப்பதற்கான
 வழியை தேடுவோம்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





வியாழன், 7 மார்ச், 2019

நாட்டில் .கடவுச்சீட்டு விநியோகத்திற்கான கட்டணங்கள் அதிகரிப்பு

கடவுச்சீட்டு விநியோகத்திற்கான ஒரு நாள் மற்றும் சாதாரண சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று
 சமர்ப்பிக்கப்பட்டது. 
இதனை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
அந்தவகையில் கடவுச்சீட்டு விநியோகத்திற்கான கட்டணம் ஒரு நாள் சேவைக்கு 5000 ரூபாவாலும் சாதரண சேவைக்கு 3000 ரூபாவாலும் அதிகரிக்கப்படும் என 
தெரிவித்துள்ளா
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெளியாகிறது க. பொ. த சாதாரணதர பெறுபேறுகள்

கடந்த-2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படவுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எஸ்.பிரணவதாசன்
 தெரிவித்துள்ளார்
கடந்த டிசம்பர் மாதம்- 03 ஆம் திகதி ஆரம்பமாகி 12 ஆம் திகதி வரை கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை நடைபெற்றது.
இதில் நாடு முழுவதுமிருந்து ஆறு இலட்சத்து 56 ஆயிரத்து 641 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமையும் 
குறிப்பிடத்தக்கது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மிருசுவில் பகுதியில் விபத்து தாயும் மகனும் மருத்துவமனையில்

 மோட்டார் சைக்கிளில் பயணித்த மகனும், தாயும் டிப்பர் வாகனத்துடன் மோதுண்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் கொடிகாமம் மிருசுவில் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இன்று (05) மாலை இடம்பெற்றுள்ளது.

மிருசுவில் பகுதியில் இருந்து கொடிகாமம் நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனத்தை மறு பக்கத்தில் பயணித்துக் கொண்டிருந்த வீதிப் போக்கு வரத்த ப் பொலிசார் மறித்துள்ளனர்.

இதனால் டிப்பர் சாரதி சடுதியாக பிரேக் பிடித்துள்ளார். இதனால் பின்புறமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த மகனும், தாயும் டிப்
பர் வாகனத்துடன் மோதுண்டு படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
குறித்த சம்பவம் இடம்பெற பகுதி வளைவான வீதிப் பகுதி, அத்துடன் டிப்பர் பயணித்த பகுதியின் மறு பக்கத்தில்
மோட்டார் சைக்கிளில் பயணித்தவாறே வீதிப் போக்குவரத்து பொலிசார் டிப்பர் வாகனத்தை நிறுத்துமாறு சைகை 
செய்தமை,
பின்னால் பயணித்த மோட்டார் சைக்கிளை கவனத்தில் எடுத்துக் கொள்ளத் தவறிய வீதிப் போக்கு வத்து பொலிசாரின் கவனயீனத்தா
ல் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக சம்பவத்தை நேரில் 
பார்த்தவர்கள் தெரிவித்தனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



செவ்வாய், 5 மார்ச், 2019

நிதியமைச்சர் மங்கள சிகரெட் பிரியர்களுக்கு வைத்த ஆப்பு

எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் சிகரெட் ஒன்றின் விலை ஐந்து ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்றைய தினம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்திலேயே குறித்த விடயம் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிகரெட்களுக்கு தேசிய கட்டுமான வரி விதிக்கப்படும் எனவும் பீடி இலைகள் இறக்குமதிக்கான செஸ் வரி 3,500 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது எனவும் மங்கள சமரவீர
 தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 4 மார்ச், 2019

விஷ்ணு கோயில் வளாகத்திற்குள் தீக்குளித்த நபர் பரிதாபமாக மரணம்

கதிர்காமம் முருகன் கோயிலுக்கு அருகில் இருக்கும் விஷ்ணு கோயில் வளாகத்திற்குள் இன்று தீக்குளித்த நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் திஸ்ஸமஹராம, 
ரண்மினிதென்ன பகுதியை சேர்ந்த 59 வயதுடைய நபர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தீக்காயங்களுக்கு உள்ளான 
நபரை ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் கதிர்காமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சனி, 2 மார்ச், 2019

இளம் தந்தை வெல பகுதியில் கழுத்தில் தூக்கிட்டு தற்கொலை

பொலநறுவை – தியபெதும – எளிகிம்புலாவெல பகுதியில் நபர் ஒருவர் கழுத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவர் நேற்றைய தினம் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த நபர் பிரிதொரு நபரிடம் 25 ஆயிரம் ரூபாவினை கடனாக பெற்றுக்கொண்டுள்ளார்.
அதை மீளச் செலுத்த முடியாது போனமையால் அவமானம் எனகருதி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.தற்கொலை செய்துகொண்டவர் 30 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஆவார்.
சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 27 பிப்ரவரி, 2019

மட்டக்களப்பில் ஒரே நாளில் அடுத்தடுத்து மீட்கப்பட்ட சடலங்கள்

மட்டக்களப்பின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து,27,02,2019, இன்று 3 சடலங்களை காவற்துறையினர் மீட்டுள்ளனர்.ஆயித்தியமலைப்
 – மகிழவெட்டுவான் கற்குடா பிரதேசத்தில், 
கிணறொன்றில் இருந்து 49 வயதுடைய ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த நபர் தனது 
சகோதரியின் பராமரிப்பில் இருந்து வந்த ஒருவர் என எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, ஏறாவூர் – வந்தாறுமூலை பிரதான வீதியை அண்மித்த கடையொன்றிலிருந்து 25 வயதுடைய இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் காவற்துறையினர் குறித்த சடலத்தை மீட்டு செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இதற்கிடை
யில், மட்டக்களப்பு – தாளங்குடா வேடர்குடியிருப்பை 
அண்டிய பகுதியில்
 எரியுண்டநிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சலடம் இன்று காலை மீட்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.சடலமாக மீட்கப்பட்டவர் 60 வயது மதிக்கதக்கவர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.எனினும், சடலம் அடையாளம் காணப்படாத நிலையில், காத்தான்குடி காவற்துறையினர் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


நெல்லைச் சேமிப்பதற்கு யாழ் -கூட்டுறவுச் சங்கங்கங்களும் இணக்கம்

யாழ்ப்­பா­ணம் மாவட்­டத்­தில் நெல்லை கொள்­வ­னவு செய்து சேமிப்­ப­தற்கு கூட்­டு­றவுச் சங்­கங்­க­ளும் இணக்­கம் தெரி­வித்­துள்­ள­தாக மாவட்ட செய­லக வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன. இது பற்றி மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது:
யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் நெல் விளைச்­சல் கடந்த
 காலத்தை விட இந்த வரு­டம் சிறப்­பா­ன­தாக அமைந்­துள்­ளது.
கடந்த வரு­டங்­க­ளில் கால நிலை மாற்­றத்­தால்
 நெல் அழி­வுக்கு உள்­ளா­னது. இத­னால் விளைச்­சல் குறை­வ­டைந்து. இம் முறை சிறப்­பாக அறு­வடை நடை­பெற்று வரு­கி­றது. நெல் சந்தை படுத்­தும் சபை இம்­முறை ஆயி­ரம் மெற்­றிக் தொன் நெல்லை கொள்­வ­னவு செய்ய தீர்­மா­னித்­துள்­ளது.
ஒரு கிலோ சம்பா 41 ரூவா­வுக்­கும் ,ஒரு கிலோ நாடு 38 ரூபா­வுக்­கும் கொள்­வ­னவு செய்­யப்­ப­டு­கி­றது.நெல் விளைச்­சல் அதி­கம் என்­ப­தால் நெல்லை சேமித்து பருவ காலத்­தில் அதனை விற்­பனை செய்­வ­தன் மூலம் விவ­சா­யி­ க­ளுக்­கும் இலா­பம் கிடைக்­கும்.
ஆகவே கூட்­டு­றவுச் சங்­கங்­கள் மற்­றும் நெல் சந்தை படுத்­தும் சபை ஆகி­யன இணைந்து இந்த முறை 2 ஆயி­ரம் மெற்­றிக் தொன் நெல்லை கொள்­வ­னவு செய்யத் தீர்­மா­னித்­து ள்­ளன.
இதற்­காக 80 மில்­லி­யன் ரூபா நிதி அமைச்­சி­டம் கேட்­கப்­பட்­டது.அதில் 50 மில்­லி­யன் ரூபா நிதி முதற் கட்­ட­மாக கிடைத்­துள்­ளது.கூட்­டு­றவுச் சங்­கங்­கள் மூலம் கொள்­வ­னவு செய்து சேமிக்­கப்­ப­டும் 
நெல் சில மாதங்­க­ளின் பின்­னர் அவை கேள்வி கோரல் மூலம் விற்­பனை செய்­யப்­ப­டும். இதன் மூலம் விவ­சா­யி­க­ளுக்­கும் நெல்­லின் உரிய விலை கிடைப்­ப­ தோடு கூட்­டு­றவு சங்­கங்­க­ளுக்­கும் இலா­பம் கிடைக்­கும்.
இவ்­வாறு சங்­கங்­கள் கொள்­வ­னவு செய்­யும் நடை­முறை 2015,16 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­யில் இருந்­தது என்று 
தெரி­விக்­கப்­பட்­டது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மருதனார்மடத்தில் படுகாயங்களுடன் உயிர் தப்பிய பயணி

யாழ் மருதனார்மடத்தில் சற்று முன் நடந்த கோர விபத்தில் உந்துருளியில் சென்ற நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;யாழ் மருதனார்மடம் புகையிரத நிலையத்திற்கு சமீபமாக சற்று முன்னர் உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவர் பின்னால் வந்த வடி ரக வாகனம் மோதித்தள்ளியுள்ளது.
இதனால், படுகாயங்களுடன் நிலத்தில் வீழ்ந்த நபரை அருகிலுள்ளோர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  யாழில் அண்மைக்காலமாக இவ்வாறான அநாவசியமான விபத்துச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை கவலைக்குரியது. சாரதிகளின் அசண்டையீனமான சாரத்தியமே மேற்படி விபத்துச் சம்பவங்களுக்கு காரணமாக அமைகின்றமையும் 
சுட்டிக்காட்டத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




திங்கள், 25 பிப்ரவரி, 2019

பல்கலை அனுமதிக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

018 க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியெய்தியவர்களில் 76,596 மாணவர்களிடமிருந்து இவ்வருட பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன.
அந்த விண்ணப்பங்களை பரிசீலனைசெய்து தெரிவுச் செயன்முறைகள் முன்னெடுக்கப்படுவதாக, பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பிரேமகுமார 
தெரிவித்தார்.
கடந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 177,907 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதிபெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



சனி, 23 பிப்ரவரி, 2019

முழு அடைப்­புப் போராட்­டம் வடக்கில்,25,02,19 திங்களன்று-

வடக்கு மாகா­ணம் முழு­வ­தும் நாளை­ம­று­தி­னம் திங்­கட்­கி­ழமை காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரைத் தேடும் உற­வு­க­ளின் ஏற்­பாட்­டில் முழு அடைப்­புப் போராட்­டம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது. இத­னால் வடக்கு முற்­றாக முடங்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.
இந்­தப் போராட்­டத்­துக்கு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, தமிழ் மக்­கள் கூட்­டணி, தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி, சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ், அகில இலங்கை மக்­கள் காங்­கி­ரஸ், ஜன­நா­யக மக்­கள் முன்­னணி, சமத்­து­வம் சமூக நீதிக்­கான மக்­கள் அமைப்பு, யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒன்­றி­யம் உள்­ளிட்ட பல தரப்­புக்­க­ளும் தங்­க­ளது முழு­மை­யான – – தார்­மீக ஆத­ரவை வழங்­கி­யுள்­ளன.
காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வு­கள் தமது தொடர் போராட்­டம் ஆரம்­பிக்­கப்­பட்டு இரண்டு ஆண்­டு­கள் நிறை­வ­டை­வதை முன்­னிட்­டும், ஐ.நா. மனித உரி­மை­கள் சபை அமர்வை இலக்கு வைத்­தும், நாளை மறு­தி­னம் திங்­கட் கிழமை வடக்கு மாகாணம் தழு­விய முழு அடைப்­புப் போராட்­டத்­துக்கு அறை­கூ­வல் விடுத்­துள்­ள­னர். அன்­றைய தினம் கிளி­நொச்சி நக­ரில் காலை கவ­ன­வீர்ப்­புப் போராட்­ட­மும் நடை­பெ­ற­வுள்­ளது.
இந்­தப் போராட்­டத்­துக்கு அர­சி­யல் கட்­சி­கள், பொது அமைப்­புக்­கள், ஒன்­றி­யங்­கள், சிவில் சமூக அமைப்­புக்­கள் உள்­ளிட்ட பல தரப்­புக்­க­ளும் தங்­கள் ஆத­ரவை வழங்­கி­யுள்­ளார்­கள்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


யாழ் புத்தூர் பெரிய தம்பிரான் ஆலயத்தில் மண்டலாபிசேக பூர்த்தி

புத்தூர் கிழக்கு பெரிய தம்பிரான் ஆலயத்தில் மண்டலாபிசேக பூர்த்தி சங்காஅபிசேகம் 22.02.2019 அன்று சிறப்பாக இடம்பெற்றது. இரவு நேர கலை நிகழ்ச்சிகளாக நடன மற்றும் இசை நிகழ்வுகள் 
நடைபெற்றன.
இரவு நிகழ்வில்  காத்தவராயன் சிந்து நடைக்கூத்து இடம்பெற்றது.
மேலும் நாடக கலைஞர் கதிரமலை ,ஆலய பூசகர்
 தேவன் ஐயா இருவருக்கும் வில்லிசைக்கலைஞர் க.சத்தியதாஸ் அவர்களும்  ஓய்வுநிலை அதிபர் அ.அருந்தவநேசன் அவர்களும் பொன்னாடை 
போர்த்தி கௌரவித்தனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




தர்மபுரம் சம்புக் குளத்தில்- ஆணின் சடலம்

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவில் உள்ள தர்மபுரம் 2 ஆம் யூனிற் சம்பு குளத்திலிருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது.
8 மதிக்கத்தக்க தர்மபுரம் பகுதியை சேர்ந்த இளம் குடும்பத்தரே இவ்வாறு சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பிரதேச மக்களால் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.
தர்மபுரம் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த நபர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

நாட்டில் .இருந்து இந்தியாவின் பிரதான துறைமுகங்களுக்கு பயணிகள் கப்பல் சேவை

இந்தியாவின் பிரதான துறைமுகங்களுக்கு யாழ்ப்பாணம் மற்றும் மன்னாா் மாவட்டங்களில் இருந்து பயணிகள் மற்றும் வா்த்தக கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான அடிப்படைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.இதனடிப்படையில், காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமயப்படுத்தும் பணிகள் ஆரம்பிக் கப்பட்டுள்ளதுடன் தலைமன்னார் கப்பல்துறையையும் புனரமைக்கும் திட்டங்களை இலங்கை துறைமுக அதிகார சபை உருவாக்கி வருகிறது.
காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமயப்படுத்தும் போது அதன் இறங்குதுறை முழுமையாக புனரமைக்கப்பட உள்ளது. வணிக கப்பல்கள் மற்றும் படகுகளை கையாள 167 மீற்றர் நீளமும் 22 மீற்றர் அகலமும் கொண்ட புதிய இறங்குதுறை நிர்மாணிக்கப்பட உள்ளது.
இவற்றுக்கான இந்தியாவிடம் இருந்து 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் மானிய கடன் கிடைக்கவுள்ளது.காங்கேசன்துறை துறைமுகம் புனரமைக்கப்படும் நடவடிக்கையோடு அங்கு பழைய சீமெந்து தொழிற்சாலை அமைந்திருந்த பிரதேசத்தில் புதிய தொழிற்பேட்டை 
நிர்மாணிக்கப்பட உள்ளது.
மேலும், காங்கேசன்துறை பிரதேசத்தை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யவும் சுற்றுலாத்துறை அமைச்சு திட்டங்களை 
உருவாக்கி வருகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

வியாழன், 21 பிப்ரவரி, 2019

நீங்கள் வீட்டில் இருந்தபடி மில்க் ரொபி செய்யும் முறை

தே.பொருட்கள்:-
ரின் மில்க் – 1 ரின்
சீனி – 2 சுண்டு (தலை தட்டி)
வனிலா – 1 மே.க
ஏலப்பொடி – 1 தே.க (மட்டமாக)
தண்ணீர் – 1/2 தம்ளர் / 10 மே.க
மாஜரின் – 1 மே.க (நிரப்பி)
மாஜரின் – 1 தே.க (நிரப்பி) தட்டுக்கு பூசுவதற்கு.
செய்முறை:-
* தாச்சியில் ரின் மில்க் , தண்ணீர் , சீனி மூன்றையும் போட்டு கரண்டியால் நன்கு சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
* இந்தக் கலவை உள்ள தாச்சியை ஒரே அளவாக எரியும் அடுப்பில் வைத்து அடிப்பிடிக்காதவாறு கிளறிக் காய்ச்சவும்.
* கலவை தடிக்கத் தொடங்கியதும் மாஜரின் , ஏலப்பொடி, வனிலா மூன்றையும் சேர்த்து கிளறவும்.
* சட்டியில் ஒட்டாது திரண்டு வரும் பதத்தில் இறக்கி மாஜரின் பூசிய தட்டு ஒன்றில் கொட்டிப் பரவவும்.
* தட்டு முழுவதும் பரவும் வண்ணம் பூரிக்கட்டையால் நன்றாக பரப்பி, கத்தியால் உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் கீறி விட்டு நன்றாக ஆறிய பின் பரிமாறலாம்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 20 பிப்ரவரி, 2019

யாழ்.நீதிமன்று எச்சரிக்கை பொது வீதிகளில் வெடி கொழுத்துவது தவறாகும்-

பொது இடத்தில் - வீதிகளில் வெடி கொழுத்துவது தவறாகும். இறுதி  ஊர்வலமாக இருந்தாலும் சரி வெடிகொழுத்தும் போது பொதுநலனைக் கருத்தில் எடுக்கவேண்டும். வீதியில் பயணிப்பவர்களுக்கு இடையூறாக வெடிகொழுத்துவதை ஏற்க முடியாது"
இவ்வாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் இருபாளைச் சந்திப்பகுதியில் பிரதான வீதியூடாகப் பயணித்த ஹஏஸ் வான் ஒன்றின் கண்ணாடிப் பகுதியில் வெடி வந்து வீழ்ந்த்தால், கண்ணாடி முற்றாகச் சேதமடைந்த்தது.
அந்தப் பகுதியால் வந்த இறுதி ஊர்வலம் ஒன்றில் வெடிகொழுத்தப்பட்ட வெடியே வான் மீது வீழ்ந்து அதன் கண்ணாடி் முற்றாகச் சேதமடைந்த்து.
இதனையடுத்து அந்த இறுதி ஊர்வலத்துடன் வெடி கொழுத்தி வந்த ஒருவரை கண்டுகொண்ட வானின் உரிமையாளர், தனது அலைபேசியில் ஒளிப்படம் எடுத்துள்ளார். அத்துடன், தனது வான் கண்ணாடியை மாற்றியமைப்பதற்கு 57 ஆயிரம் ரூபா பணத்தை வழங்குமாறும்  வெடியுடன் வந்த நபரிடம் சாரதி கேட்டுள்ளார்.
எனினும் இரு தரப்புக்கும் இடையே இணக்கம் ஏற்பட்டாத்தால் வான் சாரதி கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் வெடியுடன் வந்த நபரின் ஒளிப்படத்தை சமர்ப்பித்து முறைப்பாடு வழங்கினார்.
அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், இரு தரப்பையும் நேற்று  யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.
"குற்றஞ்சாட்டப்பட்டவர்தான் வான் மீது வெடிகொழுத்தி போட்டதற்கு ஆதாரம் இல்லை. அவர் வெடியை வைத்திருந்த்தால் அவர் மீது பழிபோட முடியாது. வாகனத்துக்கு வெடிகொழுத்தி எறியவில்லை, அவ் வழியால் பயணித்ததால் வாகனத்தில் பட்டுவிட்டது" என்று குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றுரைத்தார்.
"முறைப்பாட்டாளரால் வழங்கப்பட்ட ஒளிப்பட்டத்தில் வேறு எவருமே வெடி வைத்திருப்பதாக இல்லை.
பொது இடத்தில் - வீதிகளில் வெடி கொழுத்துவது தவறாகும். இறுதி ஊர்வலத்தில் வெடிகொழுத்தும் போது பொதுப் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கக் கூடாது" என்று குற்றஞ்சாட்டப்பட்டவரை எச்சரித்த நீதிவான் ஏ.எஸ்.பி.போல், வழக்கை 
ஒத்திவைத்தார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 19 பிப்ரவரி, 2019

சிராட்டிகுளம் பகுதியில்மகன் இறந்த சோகத்தில் உயிர் விட்ட தாய்

மகன் இறந்த சோகத்தை தாங்க முடியாத தாய் ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் 
இடம்பெறற்றுள்ளது.
 முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சிராட்டிகுளம் பகுதியில் இந்த சம்பவம் 
இடம்பெற்றுள்ளது.
 முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சிராட்டிகுளம் பகுதியை சேர்ந்த கடந்த முறை க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றிய மாணவனான யோகராசா துசியந்தன் தொடர்ச்சியாக நோய்வாய்ப்பட்டிருந்தார்.
 இந்த நிலையில் நேற்று முன்தினம் யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழத்துள்ளார் 
 உயிரிழந்த மாணவனின் சடலம் நேற்று அதிகாலை 2 மணிக்கு சிராட்டிகுளம் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்துக்கு தாய் தந்தையரால் கொண்டு வரப்பட்டுள்ளது. 
மகனது பிரிவை தாங்க முடியாத தாயார் நேற்று அதிகாலை 5 மணியளவில் வீட்டிலிருந்து சுமார் 800 மீற்றர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து
கொண்டுள்ளார். 
 ஏற்கனவே ஒரு மக்களை பறிகொடுத்த தாய் தனது இரண்டாவது பிள்ளையையும் பறிகொடுத்தார்.
 இந்த தாக்கத்தை தாங்க முடியாத யோகராசா சரஸ்வதி என்ற தாயாரே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 
 இந்த சம்பவத்தில் ஊரே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது விடயம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை 
முன்னெடுத்துள்ளனர். 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


யாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

திருத்த வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞரொருவர் திடீரென மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் யாழ்.மானிப்பாயிலுள்ள ஆலயமொன்றில் நேற்றைய தினம்(18) இடம்பெற்றுள்ளது.
மேற்படி சம்பவத்தில் யாழ்.ஆனைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த சிவசுந்தரம் சிவலோகம்(வயது-33) என்பவரே உயிரிழந்தவராவார்.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>