இந்தியாவின் பிரதான துறைமுகங்களுக்கு யாழ்ப்பாணம் மற்றும் மன்னாா் மாவட்டங்களில் இருந்து பயணிகள் மற்றும் வா்த்தக கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான அடிப்படைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.இதனடிப்படையில், காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமயப்படுத்தும் பணிகள் ஆரம்பிக் கப்பட்டுள்ளதுடன் தலைமன்னார் கப்பல்துறையையும் புனரமைக்கும் திட்டங்களை இலங்கை துறைமுக அதிகார சபை உருவாக்கி வருகிறது.
காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமயப்படுத்தும் போது அதன் இறங்குதுறை முழுமையாக புனரமைக்கப்பட உள்ளது. வணிக கப்பல்கள் மற்றும் படகுகளை கையாள 167 மீற்றர் நீளமும் 22 மீற்றர் அகலமும் கொண்ட புதிய இறங்குதுறை நிர்மாணிக்கப்பட உள்ளது.
இவற்றுக்கான இந்தியாவிடம் இருந்து 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் மானிய கடன் கிடைக்கவுள்ளது.காங்கேசன்துறை துறைமுகம் புனரமைக்கப்படும் நடவடிக்கையோடு அங்கு பழைய சீமெந்து தொழிற்சாலை அமைந்திருந்த பிரதேசத்தில் புதிய தொழிற்பேட்டை
நிர்மாணிக்கப்பட உள்ளது.
மேலும், காங்கேசன்துறை பிரதேசத்தை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யவும் சுற்றுலாத்துறை அமைச்சு திட்டங்களை
உருவாக்கி வருகின்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக