யாழ்ப்பாணம் கைதடிச் சந்தியில் நவீன வசதிகள் கொண்ட கள்ளு விற்பனை நிலையம் ஒன்றை சாவகச்சேரி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் அமைத்துள்ளது.
குடிதண்ணீர், மலசலகூடம் மற்றும் சுகாதார வசதிகளை உள்ளடக்கியதாக இந்த கள்ளு விற்பனை நிலையம் 20 லட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டதாக சங்கம் தெரிவித்தது.
புதிதாக அமைக்கப்பட்ட இந்தக் கள்ளு விற்பனை நிலையத்தை எதிர்வரும் 15 ஆம் திகதியளவில் மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து விடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று
தெரிவிக்கப்பட்டது.
நம் நாட்டில் ஒரு சில நாட்டுச்சாராயங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. அது ஏன் தடை செய்யப்பட்டது!!!! சற்று சிந்தித்து பாருங்கள். வெளிநாட்டு சாராயத்தை உள்நாட்டில் விற்பனை செய்வதற்காக சில பெரியவர்கள் எடுக்கும் முடிவாகவும் இருக்கலாம். இதை தடுப்பதற்கான
வழியை தேடுவோம்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக