வடக்கு மாகாணம் முழுவதும் நாளைமறுதினம் திங்கட்கிழமை காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளின் ஏற்பாட்டில் முழு அடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதனால் வடக்கு முற்றாக முடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தப் போராட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட பல தரப்புக்களும் தங்களது முழுமையான – – தார்மீக ஆதரவை வழங்கியுள்ளன.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமது தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டும், ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வை இலக்கு வைத்தும், நாளை மறுதினம் திங்கட் கிழமை வடக்கு மாகாணம் தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு அறைகூவல் விடுத்துள்ளனர். அன்றைய தினம் கிளிநொச்சி நகரில் காலை கவனவீர்ப்புப் போராட்டமும் நடைபெறவுள்ளது.
இந்தப் போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், ஒன்றியங்கள், சிவில் சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட பல தரப்புக்களும் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளார்கள்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக