யாழில் இடம்பெற்ற விபத்தில் குடும்பப் பெண்ணொருவர் நேற்று உயிரிழந்துள்ளார். நீர்வேலி தெற்கு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய ஞானேந்திரன் விமலா என்பவரே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்
.இவர் நேற்றையதினம் ஊர்காவற்துறை பகுதியில் மரணச் சடங்கு ஒன்றிற்கு சென்றுள்ளார். பின்னர் யாழ்ப்பாணம் நோக்கி முச்சக்கர வண்டியில் வந்துள்ளார்.
அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டிக்கு முன்பாக பயணித்த அரச பேருந்தானது அல்லைப்பிட்டி பகுதியில் நிறுத்தப்பட்டபோது முச்சக்கர வண்டியானது வேகக் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது முச்சக்கர வண்டி சாரதி, குறித்த பெண் மற்றும் அவருடன் பயணித்த மற்றொரு பெண் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக ஊர்காவற்துறை வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.என்பதாகும்
https://navakkiri.blogspot.com/2026/10/blog-post_20.html








0 கருத்துகள்:
கருத்துரையிடுக