siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 24 அக்டோபர், 2026

இலங்கை பெண்கள் இருவர் குவைத்தில் மர்மமாக மரணம்

துயர்  பகிர்வு-மலர்வு:-00 -உதிர்வு:24-10-2026
குவைத்தின் இரு வெவ்வேறு பகுதிகளில் இலங்கை பெண்கள் இருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குவைத் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அலி சபா அல்-சேலம் மற்றும் அல்-நஹ்தா ஆகிய
 பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்தே இவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், இவற்றை குவைத் பொலிஸார் இயற்கைக் கடந்த மரணம் என வழக்குகளைப் பதிவு செய்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.
முதல் சம்பவமாக, அலி சபா அல்-சேலம் பகுதியில் உள்ள வீடொன்றின் கூரையில் அமைக்கப்பட்டிருந்த களஞ்சிய அறையிலிருந்து 1988 ஆம் ஆண்டு பிறந்த இலங்கை பெண் ஒருவர் சடலமாக
 மீட்கப்பட்டுள்ளார்.
வீட்டு உரிமையாளர் அளித்த தகவலின் பேரில் அஹ்மதி பொது குற்றவியல் பிரிவு இது குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
இரண்டாவது சம்பவமாக, அல்-நஹ்தா பகுதியில் உள்ள வீடொன்றில் 1999 ஆம் ஆண்டு பிறந்த மற்றொரு இலங்கை பெண் சடலமாக 
மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்குச் சென்ற ஜஹ்ரா பொது குற்றவியல் பிரிவு தடயவியல் நிபுணர்களுடன் இணைந்து சான்றுகளைச் சேகரித்துள்ளது.
குவைத்தின் 'அரப் டைம்ஸ்' நாளிதழின் செய்தியின்படி, இரு மரணங்களும் சந்தேகத்திற்கிடமான முறையிலேயே இடம்பெற்றுள்ளதால் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காகத் தடயவியல் பிரிவுக்கு அனுப்பி 
வைக்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு உயிரிழப்புகளுக்கும் இடையே ஏதேனும் தொடர்புகள் உள்ளதா அல்லது இதில் தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரேனும் அடையாளம் காணப்பட்டுள்ளனரா என்பது குறித்த தகவல்களைக் குவைத் அதிகாரிகள் இதுவரை வெளிப்படுத்தவில்லை என குவைத் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி 
https://navakkiri.blogspot.com/2026/10/blog-post_24.html


 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக