siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 19 அக்டோபர், 2026

நாட்டில் அக்குரணை விபத்தில் நான்கு பேர் பலி

இலங்கை அலவத்துகொட – அக்குரணை, குருக்கொட 7ஆம் கட்டை அருகில் இடம்பெற்ற கோர விபத்தொன்றில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
.அலவத்துகொட பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 10 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று 
மோதிக்கொண்டுள்ளன. இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாகக் கண்டி தேசிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அலவத்துகொடப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து முழுமையாக முடங்கியுள்ளது. இதனால், குறித்த வழியைப் பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்களை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அலவத்துகொடப் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவத்துகொடப் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். சிமெந்து ஏற்றிச் சென்ற பவுசர், 
பல வேன்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் கார்கள் உள்ளிட்ட பல வாகனங்கள் இந்த விபத்தினால் முற்றாகச் சேதமடைந்துள்ளதாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


0 கருத்துகள்:

கருத்துரையிடுக