வவுனியாவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியரொருவரை வழிமறித்து இனந்தெரியாதோர் சிலர் தாக்குதல் நடத்திவிட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று பகல் 1.45 மணியளவில் செட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரஞ்சித் கண்ணா எனும் 29 வயதான ஆசிரியர் பாடசாலை நிறைவடைந்ததும் செட்டிக்குளம் ஆசிரியர் விடுதியை நோக்கி மோட்டார் சைக்கிளில்
சென்றுள்ளார்.
இதன்போது 25 முதல் 30ற்கும் இடைப்பட்ட வயதுடைய நான்கு இளைஞர்கள் செட்டிக்குளம் முதலியார்குளம் பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் மீது இரும்புக்கம்பியால் கடுமையாக தாக்குதல்
நடத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள், அந்த ஆசிரியர் பயணித்த மோட்டார் சைக்கிள் மீதும் தாக்குதல் நடத்தி விட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து காயமடைந்த ஆசிரியர் உடனே தனது சக ஆசிரியர்களுக்கு தொலைபேசி மூலம் அழைப்பினை ஏற்படுத்தி நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.
அத்துடன், தாக்குதலில் காயமடைந்த ஆசிரியர் செட்டிக்குளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு
மாற்றப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக