பத்தனை ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியில் அண்மையில் பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்கள் மறு அறிவித்தல் வரை கல்லூரிக்குள் பிரவேசிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள முடிவினை ஏற்றுக் கொள்வதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்
தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இது தொடர்பாக முழுமையான விசாரணைகளின் பின்பு குற்றம் நிரூபிக்கப்படுகின்ற மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தவும், ஒழுக்காற்று குழுவினரின் பரிந்துரைகளையும் நான்
ஏற்றுக் கொள்கின்றேன்.
இந்த ஒழுக்காற்று குழுவின் தீர்மானத்திற்கு நான் முழுமையான ஒத்துழைப்பை வழங்குகின்றேன். அதே நேரம் குற்றம் நிரூபிக்கப்படுகின்ற மாணவர்கள் தொடர்பாக எந்தவிதமான தயக்கமும் இன்றி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நான் தயாராக
இருக்கின்றேன்.
ஒரு சிலரின் நடவடிக்கை காரணமாக கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைவதை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது” என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்
தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக