நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை மர்ம நபர் ஒருவர் ஓட்டிச் சென்றமையினால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.எல்பிட்டிய பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றையே இவ்வாறு ஓட்டிச்
செல்லப்பட்டுள்ளது.
ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இல்லாத நிலையில் பேருந்தை ஓட்டி சென்ற அடையாளம் தெரியாத நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.உடுகம டிப்போவிற்கு சொந்தமான பேருந்து நீர்கொழும்பு நோக்கி செல்வதற்கு உடுகம டிப்போவில் இருந்து பயணித்துள்ளது.
எல்பிட்டிய பேருந்து நிலையத்தில் பேருந்தை நிறுத்திய சாரதி மற்றும் நடத்துனர் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளனர்.இதன்போது பேருந்தில் ஏரிய மர்ம நபர் பயணிகளுடன் பேருந்தை ஓட்டி சென்றுள்ளார்
என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அந்த நபர் ஒரு கிலோ மீற்றர் தூரம் வரை பேருந்தை ஓட்டி சென்ற நிலையில் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் முச்சரவண்டி ஒன்றின் உதவியுடன் பேருந்தை துரத்தி சென்று பிடித்துள்ளனர். சந்தேகநபரை எல்பிட்டிய பொலிஸாரிடம்
ஒப்படைத்துள்ளனர்.
இவ்வாறான செயலை செய்தது ஏன் என்பது தொடர்பில் உரிய தகவல் கிடைக்காத நிலையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ள ஒருவர் என விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் தெரிய வந்துள்ளது.இதன்போது, பேருந்தில் பெருமளவு பயணிகள் இருந்ததாகவும் அவர்கள் அச்சம் காரணமாக அபாயக் குரல் எழுப்பியதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக