வவுனியாவில் மின்சாரக் கட்டணம் செலுத்தாத வீடொன்றில் மின்துண்டிப்பு செய்ய மின்சாரசபை ஊழியர்களை இளைஞர் குழுவொன்று தாக்கியதில், ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
அவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஆச்சிபுரம் கிராமத்தில் மின்சார கண்டனத்தினை பல மாதங்களாக
செலுத்தாது அதிகளவு நிதி தேக்கமுள்ளவர்களது மின் இணைப்புக்களை துண்டிக்கும் பணிக்காக மின்சார சபை ஊழியர்கள்
சென்றிருந்தபோது, அக்கிராமத்தில் வசிக்கும் சில இளைஞர்கள் மின்சார சபை
ஊழியர்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளதுடன் வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.இதன் காரணமாக
காயங்களுக்குள்ளான
ஆறு மின்சார சபை ஊழியர்களை வவுனியாவில் இருந்து சென்ற மின்சாரசபை குழுவொன்று தமது வாகனத்தில் ஏற்றி வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.இவ்விடயம் தொடர்பாக மின்சாரசபையின் வவுனியா மாவட்ட பிரதான மின் பொறியியலாளர் திருமதி மைதிலி
தயாபாரனிடம் கேட்டபோது,
கடமையின் நிமித்தம் சென்ற எமது ஊழியர்கள் அப்பகுதியில் உள்ள ரௌடிக்கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்டுள்ளனர். வாகனங்களும் சேதமாக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த
அறுவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தற்போது வவுனியா மாவட்டத்தில் மின்சார கட்டணங்களை செலுத்தாது அதிகளவு நிதி தேங்கமுள்ளவர்களின் மின் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டு வருகின்றது. இது வழமையான செயற்பாடு.
இக் கடமையை செய்து வந்தவர்களையே ரௌடிக்குழுவொன்று தாக்கியுள்ளதுடன் அவர்களை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்க அழைத்து வந்தபோது,ரௌடிகள் எமது ஊழியர்களை பின்தொடர்ந்து வந்து,அச்சுறுத்தல் விடுத்திருந்தனர் என தெரிவித்தார்.சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட சிலரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரியவருகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக