யாழ். மல்லாகத்தில் அமைந்துள்ள தொலைக்காட்சி மற்றும் வானொலி திருத்தகத்தின் உரிமையாளர் மற்றும் மகன் மதிய உணவு உண்பதற்காகத் தமது வீட்டிற்குச் சென்ற சமயம் பார்த்து துவிச்சக்கர வண்டியில் வந்த கொள்ளையன் மேற்படி வர்த்தக நிலையத்தின் பின்கதவால் உள்நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த பெறுமதியான
வானொலி, மற்றும் உதிரிப்பாகங்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளான்.குறித்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (01.11.2019) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.மேற்படி வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் மதிய
உணவு உண்பதற்காகச் சென்ற போது வழமைபோன்று இன்றைய தினமும் வர்த்தக நிலையத்தின் பின்கதவை சாத்தி
விட்டுச் சென்றுள்ளார். இந்தச் சமயம் பார்த்தே, கொள்ளையன் தனது கைவரிசையைக் காட்டியுள்ளான்.குறித்த திருத்தகத்திற்கு அருகில் இரண்டு வர்த்தக நிலையங்கள் காணப்பட்ட போதும் அங்கு நின்றவர்கள் சற்றும் சந்தேகமடையாதவாறு நுட்பமானமுறையில்
குறித்த கொள்ளையன் திருடிச் சென்றுள்ளான். இந்நிலையில், மதிய உணவின் பின்னர் மீண்டும் வர்த்தக நிலையத்திற்கு வந்த உரிமையாளர் திருத்தும் வேலையை ஆரம்பிக்கும் போது உபகரணங்கள் திருட்டுப் போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.இதேவேளை, மேற்படி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஆசாமி
துவிச்சக்கர வண்டியில்
செல்வதும், பின்னர் கொள்ளையடித்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு விரைவாக நழுவுவதும் குறித்த பகுதியிலுள்ள சிசிரிவி காணொளியொன்றில்
பதிவாகியுள்ளது.குறித்த காணொளியின் அடிப்படையில் இளைஞனொருவன் வழங்கிய தகவலுக்கமைய மேற்படி திருட்டில் ஈடுபட்ட நபர் நேற்றுப் பிற்பகல் தெல்லிப்பழைப் பகுதியில்
மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
பிடிபட்ட நபர் தற்போது தெல்லிப்பழைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், பிடிபட்ட நபர் முழுப் போதையிலிருந்துள்ளார். அவரிடமிருந்து மேற்படி வர்த்தக நிலையத்தில் திருடிய அனைத்துப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை பொலிஸார்
முன்னெடுத்து வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக