சமூக வலைத்தளங்களின் தவறான பயன்பாடு தொடர்பாக இதுவரையில் 162 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.இலங்கை தகவல் தொழிநுட்ப சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.per.itssl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.இதற்கமைய ஜனாதிபதி
வேட்பாளருக்கு சேறு பூசும் விதமான பதிவுகள் தொடர்பாக 66 முறைப்பாடுகளும், ஜனாதிபதி வேட்பாளரின் பெயரை பயன்படுத்தி போலியான
சமூக வலைத்தளங்களை உருவாக்கிய சம்பவங்கள் தொடர்பாக 6 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
அத்துடன், ஜனாதிபதி வேட்பாளர்களை இலக்காக கொண்டு பகிரப்படும் உண்மைக்கு புறம்பான செய்திகள் தொடர்பாக 41 முறைப்பாடுகளும், குரோத கருத்துக்கள் தொடர்பாக 43
முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் பெயரை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலியான இணையத்தளம் ஒன்று
தொடர்பாகவும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 139 முறைப்பாடுகள் பேஸ்புக் சமூக வலைத்தளம் ஊடாக
வெளியிடப்பட்ட தகவல்கள் தொடர்பாகவும், 23 முறைப்பாடுகள் யூடியூப் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட காணொளிகள் தொடர்பாகவும் பதிவாகியுள்ளன.அத்துடன், பொய்யான செய்திகள் மற்றும் குரோதக் கருத்துக்கள் அடங்கிய தகவல்களை சமூக வலைத்தளங்களின் ஊடாக பகிர்வது அதிகரித்துள்ளதாகவும் இலங்கை தகவல் தொழிநுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக