கணவனும் மனைவியும் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் மாத்தளை கனேமுல்ல, ஹொரகொல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது;
குடும்ப பிரச்சினை காரணமாக (06.11.2019) அன்று இரவு 10.15 மணியளவில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.இந்தச் சம்பவத்தில் 72 வயதுடைய நபரும் அவருடைய 73 வயதுடைய
மனைவியுமே கொலை செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர்களின் சடலங்கள் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கனேமுல்ல பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக