யாழ்சாவகச்சேரி விபத்தில் வெளிநாட்டிலிருந்து திரும்பிய இளைஞர் மரணமைடைந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் சங்கத்தானை, சாவகச்சேரியைச் சேர்ந்த நிரோஷ் (வயது 24) எனவரே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் தென்மராட்சியின் சாவகச்சேரியில் 14-10-2021.அன்று மாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த இளைஞரே.15-10-2021.ö இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
சாவகச்சேரியின் மடத்தடிப் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்திருந்தது. விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுவந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
இதேவேளை குறித்த இளைஞர் அண்மையிலேயே வெளிநாடு ஒன்றிலிருந்து நாடு திரும்பியிருந்தவர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக