siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 2 அக்டோபர், 2021

தோப்பு அச்சுவேலி பகுதியில் வளர்ப்பு நாய் கடித்ததில் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்

 

யாழ்அச்சுவேலி பகுதியில் வளர்ப்பு நாய் கடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த துயர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவத்தில் அச்சுவேலி தோப்பு பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான வைரமுத்து வசந்தராசா (வயது44) என்பவரே
 உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரை கடந்த மாதம் வளர்ப்பு நாய் கடித்ததை டுத்து சில நாட்களாக தடுமாற்றம், தண்ணீரை கண்டால் பயம் போன்ற நிலை உருவானதால், அச்சுவேலி வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அதன் பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 30-10-2021.அன்று  அவர் சிகிற்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக