சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள போதிலும் சீனியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கொழும்பில் மொத்த விலை 130 ரூபாய் என்றும் சில்லறை விலை 12-10-2021.அன்று வரை 138 ரூபாவாக உயர்ந்துள்ளது என்று கோட்டை மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
நுகர்வோர் விவகார அதிகாரசபை செப்ரெம்பர் 2 ஆம் திகதி வெளியிட்ட கட்டுப்பாட்டு விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் வெள்ளைச் சீனி சில்லறை விலை 122 ரூபாய் மற்றும் ஒரு கிலோ பொதி செய்யப்பட்ட வெள்ளைச் சீனியின் சில்லறை விலை 125 ரூபாய் என
நிர்ணயித்திருந்தது.
சீனி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டாலும் டொலர்கள் பற்றாக்குறையால் சீனி இறக்குமதி செய்ய முடியவில்லை என்று இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இறக்குமதியாளர்கள் உலக சந்தையில் ஒரு மெட்ரிக் தொன் சீனியின் விலை 550 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாகவும் அதன் விளைவாக ஒரு கிலோ சீனி
துறைமுகத்தில் இருந்து 116 ரூபாய்க்கு வெளியிடப்படுவதாகவும் சுட்டிக் காட்டுகின்றனர்.மேலும் சீனி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 25 சதவீத
வரியும் 13-10-2021.அன்று இன்று முதல் இரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக