யாழ் –வடமராட்சி, கப்புது வீதியில், 26-10-2021.அன்றிரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் 40 வயதுடைய பொன்னுத்துரை காண்டீபன் எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவர் ஆவார். குறித்த நபர், தனது தாயாரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, வேகக் கட்டுப்பாட்டை இழந்ததில் விபத்துஏற்பட்டதாக
கூறப்படுகின்றது.
இதன்போது மோட்டார் சைக்கிள், பால வேலைக்காக குறுக்காக கட்டப்பட்ட சமிஞ்கையையும் தாண்டி பாலத்துக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாகவும் தெரிய வருகின்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக