siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 16 அக்டோபர், 2021

பாரிய மாற்றம் தங்கத்தின் விலையில் வெளியான இன்றைய நிலவரம்

தங்கம் விலையானது வாரத்தின் முதல் நாளான திங்கள் முதல் விலை ஏற்ற இறக்கத்துடனே இருந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளதனால் தாங்கம் வாங்குபவர்கள்
 மகிழ்ச்சியில் உள்ளனர்.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4465 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4515ஆக இருந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு
 ரூ. 50 குறைந்துள்ளது.
அதன்படி, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 36,120-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ. 400 குறைந்து ரூ.35,720-க்கு விற்பனையாகிறது. இதேவேளை ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ. 4465 விற்பனை செய்யப்படுகின்றது.
அதேவேளை தங்கத்தின் விலையானது குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் சற்று குறைந்தே காணப்படுகின்றது. ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ரூ. 67.70 விற்பனை ஆன நிலையில் இன்று கிராமிற்கு ரூ. 0.30குறைந்து 67.40 விற்பனை 
செய்யப்படுகிறது.
மேலும் நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 400 விலை குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக