இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கோடரி வெட்டு தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்
இன்று இரவு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாகவே குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது
காயமடைந்த இருவரும் தெல்லிப்பழை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இத் தாக்குதலை நடாத்திய சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக