siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 24 அக்டோபர், 2021

இரண்டு சடலங்கள் பண்டாரவளையில் மீட்பு

பண்டாரவளை- நாயபெத்த தோட்டம், கோணமுட்டாவ வீதியின் தேயிலைத் தோட்டத்தில் உள்ள வடிகான் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் 
சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், தெற்கு கெபில்லவெல- பண்டாரவளை என்ற முகவரியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவர் என பண்டாரவளைகாவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை பண்டாரவளை- மீரியகஹ சந்தியில் உள்ள வடிகானுக்கு அருகிலிருந்து மற்றுமொரு ஆணின் சடலம் 
மீட்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும், இச்சடலங்கள் தொடர்பான விசாரணைகளை பண்டாரவளை காவல் துறையினர் முன்னெடுத்துள்ளதாகவும் 
தெரிவித்துள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக