தற்போதைய காலக்கட்டத்தில் அமர்ந்த நிலையிலே நீண்ட நேரம் மனதளவில் உழைப்பவர்கள், பீட்சாவை முக்கிய உணவாகச் சாப்பிட்டுவிட்டு, பல நோய்களுக்கு வழியமைக்கின்றனர்.
பீட்சா பல மணிநேரத்துக்குப் பசியை அடக்குமே? நிச்சயமாக, அடுத்த வேளைக்கான பசி உணர்வையும் சேர்த்து அடக்கி, செரிமானம் சார்ந்த நோய்களை உண்டாக்கும். பசியை அடக்குவதோடு சேர்த்து
மலத்தையும் அடக்கும்.
மலத்தை இளக்கும் வகையிலான உணவுகளை சாப்பிடப் பழகிவிட்ட நமக்கு, மலத்தை குடலிலேயே கட்டிப்போடும் பீட்சா, நமது மரபுக்கு அந்நிய உணவுதானே! பெரும்பாலான இளைஞர்கள் நினைத்துக்கொண்டிருப்பதைப்போல, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, கொஞ்சம் புரதச்சத்து கொடுக்கும் சமச்சீரான
உணவு அல்ல பீட்சா!
அனைத்தையும் அளவுக்கு மீறிக் கொடுக்கும் சமச்சீரற்ற உணவு. பிரத்யேகச் சுவையூட்டிகள், விரைவாகக் கெடாமல் பாதுகாக்கப் பயன்படும் ரசாயனங்கள், உப்புகள், குளிர்பதனப் பெட்டியில் பாதுகாக்கப்பட்டு
சேர்க்கப்படும் அசைவத் துண்டுகள், மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி வெளிவரும் பீட்சாவில்
நடைபெறும் வேதியியல் மாற்றங்கள், பீட்சா தயாரிக்கத் தேவைப்படும் பிளீச் செய்யப்பட்ட மாவு வகைகள்… இவை அனைத்தும் சேர்ந்து நமது உடலுக்குள் நடத்தும் களேபரத்தை உணர நீண்ட நாள்கள்
காத்திருக்கவேண்டியதில்லை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக