siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 5 அக்டோபர், 2021

மறந்தும் இறந்தவர்களை வைத்துகொண்டு கூடவீட்டில் இவற்றை செய்யாதீங்க.

ஒருவன் இவ்வாறு தந்தையின் மரபிற்குப் பத்துப் பேர்களும் உள்ளார்கள். ஒருவன் மரித்தும் பிதுரர்களோடு சேர்த்தும் நான்காம் பாட்டன் முதல் தியாசகன் ஆகிறான்.மூன்றாம் லேபகன் பந்தியில் வருவோனாகிறான். புத்திரன் சிரார்த்தம் செய்தால் மாண்டுபோன தந்தை மகிழ்ந்து அந்தப் புத்திரனுக்கு ஒரு புத்திரனை தருகிறான்.
சிரார்த்தம் செய்வதில் பிதுரர்களுக்குத் திருப்தியுண்டாலதன்றி செய்பவனுக்கு மிக்க பயன் உண்டு. உயிர் நீங்கிய பிறகு தேகத்தை வைத்திருக்க கூடாது. அதனால் உடனே சம்ஸ்காரம் செய்ய வேண்டும்.தனிஷ்டா பஞ்சகத்தில் இறந்த தோஷ நிவர்த்தியின் பொருட்டுச் சாஸ்திரத்தில் கூறியுள்ளபடி சில கருமங்களை அதிகமாக செய்தல்
வேண்டும். எள்ளும் கோவும் ஹிரண்யமும் நெய்யும் தானம் கொடுக்க வேண்டும். தனிஷ்டா பஞ்சகத்தில் மாய்ந்தவருக்கு சாஸ்திரத்தில் சொல்கிரபடிச் செய்யாவிட்டால் கருமஞ் செய்யும் கர்த்தா 
துன்பம் அடைவான்.
கருடா! ஒருவன் மரித்தவுடன் அவனது கால்களையும் கைகளையும் கட்ட வேண்டும். உறவினரெல்லாம் சவத்தின் அருகிலேயே இருக்க வேண்டும். ஒரு கிராமத்தில் ஒரு சவம் கிடந்தால் யாரும் சோறும் நீரும் உண்ணலாகாது. அப்படி உண்டால் மாமிசம் உண்ட தோஷமும் இரத்தம் பருகிய தோஷமும் அடைவார்கள்.
தந்த சுத்தியும் செய்யலாகாது. இரவில் பிணங் கிடக்கும் பொது ஆண் பெண் கூடியின்புறுதல் கூடாது என்றார் திருமால்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>









0 கருத்துகள்:

கருத்துரையிடுக