இலங்கையில் ஜூலை முதலாம் திகதி முதல் எரிபொருளை வழங்க புதிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாடிக்கையாளர்களை பதிவு செய்து, வாராந்தம் உத்தரவாத அடிப்படையில் எரிபொருள் வழங்கவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர
தெரிவித்துள்ளார்.
ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் தனது ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக குறிப்பிட்டுள்ளார்.
போதிய அளவான எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டாலும், தொடர்ந்தும் எரிபொருளுக்கான வரிசை நீள்கிறது. சிலர் தேவைக்கு அதிகமாக எரிபொருளை கொள்வனவு செய்து சேமிப்பதனாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
வழமையான மின்விநியோகம் வழமைக்கு திரும்பும் வரை எரிபொருள் விநியோகம் மற்றும் எரிபொருள் முகாமைத்துவத்தை
மேற்கொள்ள முடியாத
நிதி கட்டுப்பாடு காரணமாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எண்ணெய் இறக்குமதி ஒரு வாரத்திற்கு
கையிருப்பில் உள்ளது.
24 மணி நேர மின் விநியோகத்தை மேற்கொள்வதற்கான டீசல், உலை எண்ணெய் மற்றும் நெப்டா என்பனவற்றிக்காக மாதாந்தம் மேலதிகமாக 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக