கனடா – ரொறன்ரோவில் இடம்பெற்ற தீ வைப்புச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.பகல்வேளை பேருந்து ஒன்றில் பயணித்த இளம் பெண் ஒருவர் உயிருடன் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவமே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிகவும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட குறித்த பெண் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனுடன் தொடர்புடைய 35 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் ரொறன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது ஒரு தற்செயலான தாக்குதல் சம்பவம் எனத் தெரிவித்துள்ள காவல்துறையினர், இது கவலைக்குரிய விடயம் என தெரிவித்துள்ளனர்.நபர் ஒருவர் குறித்த பெண் மீது திரவப் பொருளை ஊற்றி பற்ற வைத்ததாகவும், இதனால் தீ மூண்டதாகவும் காவல்துறையினர்
தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் சம்பவத்தின் பின்னணி தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், குறித்த பெண்ணுக்கும் அந்த நபருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக