siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 17 ஜூன், 2022

இடம்பெற்ற விபத்தில் கனடாவில் இலங்கை தமிழ் இளைஞன் பலி

கனடாவில் பொலிஸ் அதிகாரியாக கடமையாற்றிய இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர்((15-06-2022) நேற்றுமுன்தினம் இடம்பெற்ற விபத்தில் 
உயிரிழந்துள்ளார்.
28 வயதான விஜயாலயன் மதியழகன் என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் 
தெரிவிக்கின்றன.
இவர் கனேடிய இராணுவத்தில் பல வருடங்கள் பணியாற்றிய நிலையில், இரண்டு வருடங்களுக்கு முன்னர் பொலிஸ் சேவையில்
 இணைந்துள்ளார்.
விபத்தில் படுகாயங்களுக்குள்ளான அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் இலங்கையில் பிறந்து ஒட்டாவாவில் வளர்ந்தவர் 
எனக் கூறப்படுகிறது.
இந்த விபத்து அவர் கடமையில் இல்லாதபோது நிகழ்ந்ததாக ஒட்டாவா பொலிஸார் அறிவித்துள்ளனர்.
எனினும், இவரது மறைவு காரணமாக அனைத்து ஒட்டாவா காவல்துறை கட்டிடங்களில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க
 விடப்பட்டுள்ளன.
விபத்து தொடர்பில் ஒன்ராறியோ மாகாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக