siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 23 ஜூன், 2022

நாட்டில் மீண்டும் சத்தம் சந்தடி இன்றி உச்சம் தொட்ட விலைவாசி

 

நாட்டில் மேலும் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மீண்டும் சடுதியாக உயர்ந்துள்ளன.நாம் அன்றாடம் பயன்படுத்தப்படும் சவர்க்காரம், பற்பசை, பிஸ்கட் வகைகள், நூடில்ஸ் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகளே சத்தம் சந்தடி இன்றி 
அதிகரித்துள்ளன.
கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் 135 ரூபாவாக காணப்பட்ட சவர்க்காரத்தின் விலை, தற்போது 185 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நடுத்தர அளவான பற்பசை ஒன்றின் விலை 185 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் 160 கிராம் நிறைக் கொண்ட பற்பசையின் புதிய விலை 310 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிய நூடில்ஸ் பொதியொன்று 120 ரூபாவாக அதிகரித்துள்ளது. முன்னதாக அந்த நூடில்ஸ் பொதி 55 முதல் 60 ரூபாவிற்கு விற்பனை 
செய்யப்பட்டது.
அத்துடன் பிஸ்கட் வகைகளின் விலைகளும் மீண்டும் 
அதிகரித்துள்ளன.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக