தெற்கு ஜெர்மனி வட்டாரத்தில் உள்ள ski resort பகுதியில் ரயில் ஒன்று தடம்புரண்டதில் நால்வர் மாண்டதாக மீட்புச்சேவை அதிகாரிகள்
தெரிவித்தனர்.
30 பேர் காயமடைந்ததாகவும் 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் கூறினர்.
விபத்து நேர்ந்தபோது சுமார் 60 பேர் ரயிலில் இருந்ததாக நம்பப்படுகிறது.
ரயிலில் பல பள்ளி மாணவர்கள் இருந்தனர் என்று செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
விபத்துக்கான காரணம் குறித்த விசாரணைகள் நடந்துவருவதாகக் காவல்துறை தெரிவித்தது.
மாண்டவர்களின் அடையாளம் குறித்த விவரங்கள்
ஏதுமில்லை.
அப்பகுதியில் முற்றிலும் ரயில்சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மீட்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் நடந்துகொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
ஜெர்மனி முழுவதும் பயணம்செய்ய மலிவுக் கட்டணச்சேவை ஜூன் முதல் தேதி நடைமுறைக்கு வந்தது.
மலிவுக் கட்டணம் என்பதால் தற்போது பயணிகளின் எண்ணிக்கை ரயிலில் அதிகமாய் இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக