siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 7 ஜூன், 2022

அக்கரப்பத்தனையில் விறகு தேடச் சென்ற இளம் யுவதிகளைக் காணவில்லை

விறகு தேடச் சென்ற இரண்டு யுவதிகளை கடந்த 06 நாட்களாக காணவில்லை என அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு காணாமல் போனவர்கள் அக்கரப்பத்தனை சென்மார்கட் தோட்டத்தில் வசிக்கும் சிவக்குமார் ரூபிகா (வயது 15), சிவலிங்கம் ஸ்ரீதேவி (வயது 18) ஆகிய இரண்டு யுவதிகள் என பொலிஸார் 
தெரிவித்தனர்.
கடந்த 2ஆம் திகதி காலை 11 மணியளவில் வீட்டில் இருந்து விறகு சேர்க்க சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை என்றும், இதுவரை இவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் 
தெரிவித்தனர்.
இவர்களின் தாய், தந்தையர்கள் மற்றும் உறவினர்கள் கொழும்பு உட்பட சகல இடங்களிலும் தேடிய போதிலும், இதுவரை கிடைக்கவில்லை. அக்கரப்பத்தனை பொலிஸ் ‌‌‌அதிகாரிகள் தொடர்ந்து தேடும் பணியில் ‌‌‌‌ ஈடுபட்டு
 வருகின்றனர்.
குறித்த 2 யுவதிகளும் தோட்டத்தில் தொழிலாளிகளாக தொழில் செய்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>> >



0 கருத்துகள்:

கருத்துரையிடுக