வாழைச்சேனை செங்கலடி புதிய வீதி கொம்மாந்துறையைச் சேர்ந்த பிள்ளையான் கணேசமூர்த்தி (69 வயது) என்பவரே சடலமாக
மீட்கப்பட்டுள்ளார்.
பொது மைதானத்திற்கு அருகில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பன்டார தெரிவித்தார்.
குறித்த நபர் வீட்டிலிருந்து வெளியேறி சுமார் ஆறு நாட்கள் உணவின்றி தவித்து வந்துள்ள நிலையில், பசியின் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சடலம் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக