நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சில வர்த்தக வங்கிக் கிளைகள் பரிவர்த்தனைகளுக்கான திறக்கும் நேரத்தை மாற்றியமைத்துள்ளன.
தனால், வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை முடிந்தளவு இணையவழியில் வங்கி பரிவர்த்தனை (Digital or Internet Banking) நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு கோரிக்கை
விடுத்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக துறைமுகம், சுகாதாரம், அத்தியவசிய உணவுப்பொருள் விநியோகம் உள்ளிட்ட சில அத்தியாவசிய சேவைகளுக்காக எரிபொருளை விநியோகிக்குமாறு அரசாங்கம்
அறிவித்திருந்தது.
அத்துடன் ஏனைய அனைத்து துறையினரும் வீடுகளில் இருந்து பணியாற்றி, எரிபொருள் நெருக்கடியை தீர்க்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும், இல்லையெனில் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் வசமுள்ள
எரிபொருளை பங்கீடு செய்வதில் சிக்கல் நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே எதிர்வரும் 10ஆம் திகதிவரை
அத்தியவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு ஏனைய செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அமைச்சர் பந்துல குணவர்தன
தெரிவித்திருந்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக