siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 30 செப்டம்பர், 2022

நாட்டில் திரிபோஷா தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

இலங்கை அரசாங்கத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ள திரிபோஷா தொடர்பில் எந்தவித சந்தேகமும் இன்றி.30-09-2022. இன்று முதல் அதனை பயன்படுத்த முடியும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.திரிபோஷாவை உணவாக கொள்வதற்கு தேவையற்ற அச்சத்தை கொண்டிருக்க வேண்டாம் என்றும் இது தொடர்பான உண்மைக்கு புறம்பான தகவல்கள் வெளியிடப்படுவதாகவும் குடும்ப சுகாதார சேவை அலுவலகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.Aflatoxin அடங்கியிருப்பதாக பரிசோதனையின்...

வியாழன், 29 செப்டம்பர், 2022

நடந்த கோர விபத்தில் யாழில் சிகிச்சை பலனின்றி இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் உந்துருளி விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் 7 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் மத்தியூஸ் வீதியை சேர்ந்த அன்ரன் தினுஜன் (வயது 21) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.கோப்பாய் சந்திக்கு அருகில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற உந்துருளி விபத்தில் வீதியோர கால்வாய்க்குள் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.வைத்திய...

புதன், 28 செப்டம்பர், 2022

இலங்கையில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் புதிய நடைமுறை

நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்தும் தர ஆய்வுக்காக எரிபொருள் மாதிரிகள் சேகரிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.நேற்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.இதன் மூலம் தரம் குறைந்த எரிபொருள் இல்லாது சீரான எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.மேலும் தெரிவிக்கையில்,“கடந்த மாதத்தில் மட்டும் பெட்ரோல்...

செவ்வாய், 27 செப்டம்பர், 2022

நாட்டில் மீண்டும் அதிகரித்த மின்வெட்டு நேரம்..வெளியான புதிய அறிவிப்பு

நாட்டில்  நாளாந்த மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.இதற்கமைய,27-09-2022. இன்று 03 மணித்தியாலங்களாக மின்வெட்டு நேரம் நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் மூன்றாவது மின் உற்பத்தி செய்யும் இயந்திரம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.இதன் காரணமாக மின்வெட்டு நேரம்நீடிக்கப்பட வேண்டியிருக்கும்...

மரண அறிவித்தல் திரு சிவா சிவலிங்கம் (கட்டை சிவா)26.09.22

பிறப்பு-09 031967-இறப்பு-26 09 2022.யாழ். எழுதுமட்டுவாள் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவா சிவலிங்கம் அவர்கள் 26-09-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற சிவலிங்கம் கணபதிப்பிள்ளை, நாகம்மா(இலங்கை) தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற திரு.திருமதி இரவீந்திரன் அவர்களின் அன்பு மருமகனும்,சியாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,ஆர்த்திகா, ஆருத்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,சறோஜினிதேவி(சுவிஸ்), வசந்தகுமாரி(இலங்கை),...

திங்கள், 26 செப்டம்பர், 2022

நாட்டில் எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் ஐ.ஓ.சி நிறுவனம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி

   இலங்கையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள கடும் வீழ்ச்சியை கருத்தில் கொண்டு எரிபொருள் விலையை குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தும் என ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் ஐ.ஓ.சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா மேலும் தெரிவிக்கையில்,சர்வதேச சந்தையில் தற்போது எண்ணெய் விலை ஒன்பது மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ள நிலையில், விலை குறைப்பு குறித்து மின்சாரம் மற்றும் எரிசக்தி...

ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

களுத்துறையில் ஆபத்தாக மாறிய வரும் டொபி வகை. பாடசாலை மாணவர்கள் பலர் வைத்தியசாலையில்

இலங்கையில் களுத்துறை – புலத்சிங்கள கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையொன்றில் கல்விபயிலும் ஏழு மாணவர்கள் இனிப்பு (டொபி ) வகையொன்றை சாப்பிட்ட நிலையில் அகலவத்தை பிம்புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் பமிலா நிஷாந்தி தெரிவித்துள்ளார்.மேலதிக வகுப்பொன்றில் பங்கேற்ற ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் குழுவொன்று கடையொன்றில் ஒரு வகையான இனிப்பு டொபியை வாங்கி உட்கொண்ட நிலையில், திடீரென நோய்வாய்ப்பட்டு 7 பேர் அகலவத்தை...

சனி, 24 செப்டம்பர், 2022

நாட்டில் மின்வெட்டு தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

நுரைச்சோலையில் உள்ள நிலக்கரி ஆலைக்குத் தேவையான நிலக்கரியை பெற்றுக்கொள்ள பணம் கிடைக்காததால் நவம்பர் முதல் வாரத்தில் தினமும் பத்து மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.நிலக்கரியைக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான பணத்தை பெற்றுக் கொள்வதற்காக மத்திய வங்கியுடன் கலந்துரையாடிய போதிலும் இதுவரை வெற்றிகரமான பதில் கிடைக்கவில்லை எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க கூறியுள்ளார்.ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட...

வெள்ளி, 23 செப்டம்பர், 2022

நாட்டில் கோதுமை மாவின் விலை குறைகிறது புதிய விலை தொடர்பான அறிவிப்பு

அடுத்த வாரம் முதல் கோதுமை மாவின் விலை குறைவடையக் கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.சந்தையில் கோதுமை மாவின் விலை கடுமையான உயர்வினை எட்டியுள்ளதாலும், கோதுமை மா பற்றாக்குறையினாலும் பொதுமக்கள் மற்றும் பேக்கரி தொழிற்துறையுடன் ஈடுபடுவோர் கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.இந்த நிலையில் முன்பதிவு செய்யப்பட்ட கோதுமை மா துறைமுகத்திற்கு வந்துள்ளதன் காரணமாக அடுத்த வாரம் முதல் கோதுமையின் விலை குறைவடையும் என இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.துருக்கி...

வியாழன், 22 செப்டம்பர், 2022

நாட்டில் மின்கட்டண உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வழிபாட்டு தலங்கள்

இன்று மின்சாரக் கட்டணம் தாங்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும், இது தொடர்பில் சமூகத்தில் அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.குறிப்பாக மதத் தலைவர்கள் குழுவை தாம் சந்தித்ததாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இது தொடர்பில் சமய ஸ்தலங்கள் எதிர்நோக்கும் பிரச்சினை பாரதூரமானது என்றும் தெரிவித்தார்.நாடு வங்குரோத்து நிலையை அடைந்துள்ள போதிலும், உரிய முறையில் திட்டமிடப்பட்டால் நாட்டின் அத்தியாவசியமான இடங்களுக்கு...

புதன், 21 செப்டம்பர், 2022

இலங்கையில் திரிபோஷவில் நச்சுத்தன்மை என அச்சத்தை ஏற்படுத்தும் செயற்பாடு.

குழந்தைகள் மற்றும் தாய்மாருக்கு வழங்கப்படும் திரிபோஷ உணவில் எஃப்லடொக்சின் எனும் புற்றுநோய் உண்டாக்கும் நச்சுப்பொருள் உள்ளடங்கியிருப்பதாக பகிரப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில், “ திரிபோஷ உணவில் புற்றுநோய் உருவாக்கும் நச்சுப்பொருள் இருக்கின்றது...

செவ்வாய், 20 செப்டம்பர், 2022

இலங்கையில் அரிசியின் விலை அதிகரிக்கும் சாத்தியமாம்

நாட்டில் அரிசியின் விலையானது அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஒரு கிலோகிராம் அரிசிக்கு நூற்றுக்கு இரண்டரை வீதம் சமூக பாதுகாப்பு வரி செலுத்த வேண்டியுள்ளதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முதின் பெரேரா தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக அரிசியின் விலையானது மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,...

திங்கள், 19 செப்டம்பர், 2022

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் திடீரென ஏற்பட்ட மாற்றம்.

அண்மைக்காலமாக சர்வதேச சந்தையில் குறைவடைந்த தங்கத்தின் விலையில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 12.53 அமெரிக்க டொலர்களால் அதிகரித்து 1,675.22 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.இதேவேளை, கடந்த 30 நாட்களில், தங்கத்தின் விலை 95.88 அமெரிக்க டொலரால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.ரஷ்ய -உக்ரைன் போர் காரணமாக உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் தங்கத்தின் விலையிலும்...

ஞாயிறு, 18 செப்டம்பர், 2022

வட்டுக்கோட்டை சந்தியில் விபத்தில் நூலிழையில் உயிர் தப்பிய இரு பெண்கள்

யாழ்.வட்டுக்கோட்டை சந்தியில் 17-09-2022.அன்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, மாதகலை சேர்ந்த சித்தியும்(வயது 39) பெறா மகளும் (வயது 20) அராலியில் உள்ள உறவினர்களது வீட்டிற்கு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தனர்.அப்போது காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனம் வட்டுக்கோட்டை...

சனி, 17 செப்டம்பர், 2022

இலங்கை பேலியகொடை சந்தையில் வீழ்ச்சி அடைந்த மீன்களின் விலை

இலங்கை சந்தையில் மீன்களின் விலை குறைந்துள்ள போதிலும், நுகர்வோர் மீன்களை கொள்வனவு செய்யாத நிலை உள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.பேலியகொடை சந்தையில் பெரும்பாலான மீன்களின் விலைகளில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பேலியகொடை மீன் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்கிரமாராச்சி குறிப்பிட்டுள்ளார்.குறிப்பாக 1,000 ரூபாவுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட மீன்கள் 500 ரூபா வரையில் வீழ்ச்சியடைந்துள்ளது.இதேவேளை, கோழி இறைச்சியின் விலை மேலும் அதிகரித்துள்ளதாக...

வெள்ளி, 16 செப்டம்பர், 2022

யாகொட தொடருந்து நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தில் மோதுண்ட கார்

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த விரைவு தொடருந்தினால் மகிழுந்து ஒன்று மோதப்பட்டுள்ளது.கம்பஹா – யாகொட தொடருந்து நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விபத்தின்போது மகிழுந்து சாரதி மாத்திரம் பயணித்ததாகவும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.தொடருந்தினால் மோதப்பட்ட மகிழுந்து தொடருந்து நிலைய மேடை வரை இழுத்துவரப்பட்டிருந்தது. இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>...

வியாழன், 15 செப்டம்பர், 2022

அமரர் ஐயம்பிள்ளை சந்திரசேகரம் (சந்திரன் ) 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.16.09.22

தோற்றம் -07-12-1955-மறைவு-19.08.2022 யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும்  கொண்ட அமரர் ஐயம்பிள்ளை சந்திரசேகரம் அவர்களின் 31ம் நாள்  நன்றி நவிலலும் வீட்டுகிருத்திகை  கிரீமலை அழைப்பிதழ்எதிர்வரும் 16-09-2022. வெள்ளிக்கிழமை  அன்று காலை 07,மணியளவில் கிரீமலை  தித்தக்கரையில் ஆத்மா   சாந்திப்பிரத்தனை   நிகழ்வுகள் நடைபெற்று 18-09-2022, அன்று ஞாயிற்றுகிழமை  பிற்பகல்,11,மணி அளவில் ...

செவ்வாய், 13 செப்டம்பர், 2022

மரண அறிவித்தல் அமரர் சிவகுமார் கஜானி13.09.2022

மலர்வு  - 06.10.2003   உதிர்வு-13.09.2022சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கஜானி சிவகுமார்  13.09.2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார் காரைநகர் கோவளத்தை சேர்ந்த சிவகுமார் நாகரூபி தம்பதிகளின் அன்பு மகளும் ஆவார் இவர்அபிராமிகவிசா ஆகியோரின் அன்புச் சகோதரியும் காலம் சென்ற சிவசுப்பிரமணியம் மற்றும் இந்திராணி  அம்மா காலம் சென்ற முருகேசு மற்றும்விசயசறோஜினிதேவி அவர்களின்பாசமிகு பேர்த்தியும் ஆவார்.பார்வைக்குபுதன்கிழமை...

மரண அறிவித்தல் அமரர் ஜெகநாதன் ஜேகீஷன் ( ஜெகி )12.09.22

விண்ணில்--12 .09.2022 சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டஅமரர் ஜெகநாதன் ஜேகீஷன் ( ஜெகி )அவர்கள் 12-09-2022-திங்கள்கிழமை அன்று அன்று சிவபதம் அடைந்தார்  இவர் திரு திருமதி ஜெகநாதன் ஜெயகௌரி தம்பதிகளின் சிரேஷ் ட   புத்திரனும் கெருடாவிலைச் சேர்ந்த காலம்சென்ற பெரியதம்பி  சரஸ்வதி காலம்சென்ற கனகரத்தினம் மற்றும் பற்குணராத்தினம்மா தம்பதிகளின்  பேரனும் அனுத்திகா அபிசாந்  அவர்களின் அன்புச் சகோதரனும்...

திங்கள், 12 செப்டம்பர், 2022

இறுதிசடங்கு செலவு பிரிட்டன் ராணிக்கு எவ்வளவு தெரியுமா.

பிரிட்டன் மகாராணி எலிசபெத் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். பிரிட்டன் மகாராணி ஸ்கார்ட்லாந்தில் உள்ள பால்மாரல் அரண்மனையில் தங்கி இருந்தபோது திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார் .தொடர் சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 96 வயது வரை வாழ்ந்த எலிசபெத் தனது வாழ்நாளில் 70 ஆண்டுகாலம் ராணி பட்டம் பெற்று ஆட்சி நடத்தியுள்ளார்.இந்த நிலையில் நிர்வாக ரீதியான சில மாற்றங்களும் பிரிட்டனில் நடைபெற...

ஞாயிறு, 11 செப்டம்பர், 2022

ஐந்தாம் ஆண்டு-நினைவஞ்சலி-அமரர் சுப்பிரமணியம் இராமச்சந்திரன் (குட்டி) 11.09.22

இறப்பு-11-09-2017.-ஐந்தாம்  ஆண்டு-நினைவஞ்சலி-11-09-2022.யாழ்.  நவற்கிரி புத்தூரைய்  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்  கொண்ட   (குட்டி கடை உரிமையாளர்) அமரர் சுப்பிரமணியம்   இராமச்சந்திரன்  (குட்டி)   அவர்களின் .ஐந்தாம்  ஆண்டு-நினைவஞ்சலி-11-09-2022.-இன்று அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்.(மணியம்.) தங்கரத்தினம் (செல்லம்மா)    தம்பதிகளின் அன்பு மகனும் ,     ...

மடோல பிரதேசத்தில் காணி தகராறில் நபர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை

இலங்கையில் அக்குரஸ்ஸ, மடோல பிரதேசத்தில் 10-09-2022.அன்றிரவு நபர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.காணி தகராறில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, கூரிய ஆயுதத்தால் நபரின் மூத்த சகோதரர் தாக்கியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் அலுபோமுல்ல பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும்...

சனி, 10 செப்டம்பர், 2022

கடலில் படகு கவிழ்ந்து பிரேசில் விபத்து பரிதாபமாக 14 பேர் உயிரிழப்பு

பிரேசில் நாட்டில் மராஜோ தீவில் பாரா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்திலிருந்து  பிலிம் நகரம் நோக்கி இன்று படகு சென்று கொண்டிருந்தது. இந்த படகில் 40 பேர் பயணித்தனர். கொடிஜுபா தீவு அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.ஆனால் இந்த விபத்தில்...