siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 26 டிசம்பர், 2022

கூகுலில் பட பேட்ஜின் மூலம் தொடர்புடைய இணைய தளங்களை கண்டறிவது எப்படி

பட பேட்ஜின் மூலம் படத்தின் இணையப் பக்கத்தில் உள்ள உள்ளடக்கத்தின் வகையை நீங்கள் அறியலாம்.
Googleளில் படங்களைத் தேடும்போது சில படங்கள் பேட்ஜ்களுடன் இருக்கும். உதாரணமாக, தயாரிப்புகளுக்கு தயாரிப்பு, ரெசிபிகளுக்கு ரெசிபி மற்றும் வீடியோக்களுக்கு வீடியோ. இந்த பட பேட்ஜ்கள் இணையத்தில் 
நீங்கள் என்ன வகையான உள்ளடக்கம் தேவை என்பதை கண்டறியலாம்.
உதாரணமாக, ரெட் வெல்வெட் கப்கேக் ரெசிபியைக் கண்டறிய
 விரும்பினால்:
"ரெட் வெல்வெட் கப்கேக்" என்று தேடவும்.
ரெசிபி ரெசிபி பேட்ஜ் உள்ள படத்தைக் கண்டறியவும்.
படத்தின் கீழ் உள்ள இணைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
படத்தின் பரிமாணங்களைக் கண்டறிதல்
கம்ப்யூட்டர் உலாவியில் படத்தைத் தேடும்போது படத்தின் பரிமாணங்களைக் கண்டறியலாம்.
உங்கள் தேடல் முடிவுகளில் இருந்து ஒரு படத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
வலது பேனலில், படத்தின் விரிவாக்கப்பட்ட காட்சியின் மீது சுட்டியை நகர்த்தவும்.
உதவிக்குறிப்பு: கம்ப்யூட்டரில், படத் தேடல் முடிவுகளை அளவின்படி வடிகட்டலாம். படத்தைத் தேடிய பிறகு தேடல் பட்டியின் கீழ் கருவிகள் அதன் பிறகு அளவு என்பதைக் கிளிக் செய்யவும்.

படத் தேடல் முடிவுகளை வடிப்பான்கள் மூலம் சுருக்குதல்
படத் தேடல் முடிவுகளுக்கு மேலே உள்ள வடிப்பான்கள் மூலம் குறிப்பிட்ட படங்களை நீங்கள் கண்டறியலாம். என்ன தேடுவது என்பது 
உறுதியாகத் தெரியவில்லை எனில் விரிவான படத்
 தேடலுடன் தொடங்கி வடிப்பான்களைச் சேர்த்து முடிவுகளைச் சுருக்கலாம்.
உங்கள் தேடல் வார்த்தைகளுடன் தொடர்புடைய
 சொற்களை அதிகம் தேடப்பட்டவற்றின் அடிப்படையில் வடிப்பான்கள் காட்சிப்படுத்திடும். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வடிப்பான்களைத் தேர்ந்தெடுக்கும்போது உங்கள் தேடல் வார்த்தைகளுடனும் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து வடிப்பான்களுடனும் பொருந்துகின்ற பட முடிவுகளை நீங்கள் பெறுவீர்கள். ஒரு வடிப்பானை அகற்ற, அதை மீண்டும் தேர்ந்தெடுக்கவும்.
உதவிக்குறிப்பு: வடிப்பான்களில் உள்ள பரிச்சயமற்ற சொற்களை நீங்கள் அடையாளம் காண உதவும் வகையில் பெரும்பாலான வடிப்பான்கள் சிறுபடவுருக்களைக் கொண்டிருக்கும்.
முக்கியம்: சில நாடுகள் அல்லது மொழிகளில் இந்த அ
ம்சம் கிடைக்காது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக