
இலங்கையில் மஹியங்கனை பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 35 வயதுடைய இளம் தாயொருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சம்பவத்தில் உயிரிழந்த தாய் தனது பிள்ளை மற்றும் கணவருடன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது திடீரென வீட்டிற்குள் வந்த காட்டு யானையொன்று வீட்டின் சில பகுதிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளது.இதன்போது உறங்கிக்கொண்டிருந்த குழந்தையுடன் அயலவர் வீட்டிற்கு கணவன், மனைவி தப்பித்து செல்லும் வழியில் காட்டு யானை...