அநுராதபுரம் அலையபத்து பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அநுராதபுரம் - மஹாமன்கடவல, அலையபத்து பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (26) இரவு 11.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் தாயும் அவரது இரண்டு பிள்ளைகளும் தீயில் கருகி
உயிரிழந்துள்ளனர்.
தீ விபத்தில் காயமடைந்த தந்தை அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று
வருகின்றார்.
தாயும், இரண்டு குழந்தைகளும் படுத்திருந்த அறையில் தீப்பிடித்தது.
தீ விபத்து ஏற்பட்ட போது தந்தை வேறொரு அறையில் உறங்கிக் கொண்டிருந்ததாகவும், இதனால் அவர் உடனடியாக
பீதியடைந்து அறைக்கு வந்து மனைவி மற்றும் பிள்ளைகளை காப்பாற்றும் போது அறையில் தீ முற்றாக பரவியுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
33 வயதான தாய், 10 வயது மகள் மற்றும் 05 வயது மகன் ஆகியோர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
அவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்ததாக கூறப்படுகிறது.
தனது மனைவி மற்றும் பிள்ளைகளை காப்பாற்ற முற்பட்ட போது பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான தந்தை, தற்போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், தனது குடும்பத்தை இழந்து கண்ணீர் மல்கியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அனுராதபுர பதில் நீதவான் திரு.சந்தன வீரகோன் இன்று (27) பிற்பகல் வந்து நீதவான் விசாரணைகளை
மேற்கொண்டார்.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனினும், தீ விபத்து ஏற்பட்ட போது அறையில் பெற்றோல் போத்தல் இருந்ததாக தந்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக