முல்லைத்தீவு பகுதியில் 14 வயது சிறுமியொருவர் தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சிறுமி புதுக்குடியிருப்பு பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தொடர்ச்சியாக போதைப்பொருட்கள் கொடுத்து இளைஞர்களால் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சட்டவைத்திய அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமி தற்போது பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு அபிவிருத்தி உத்தியோகத்தரால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது சகோதரனின் நண்பர்களால் போதைப்பொருள் கொடுக்கப்பட்டு பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில்
தெரியவந்துள்ளது.
சிறுமியை வன்புணர்விற்கு உட்படுத்திய இளைஞர்கள் சிறுமிக்கு ஒரு வகையான இனிப்பு வழங்கி பின்னர் வன்புணர்விற்கு உட்படுத்தி வந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரியின் விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சட்டவைத்திய அதிகாரியினால் புதுக்குடியிருப்பு காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன், புதுக்குடியிருப்பு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக