நுவரெலியா ராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லோயர் டிவிஷன் தோட்டத்தில் இன்று (05) காலை 10 மணியளவில் தீ பரவி 20 தோட்ட வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக ராகலை பொலிஸார்
தெரிவித்தனர்.
தீ விபத்தின் போது தோட்ட வீடுகளில் வசிக்கும் தோட்ட தொழிலாளர்கள் வேலைக்காக சென்றுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் பெய்த கடும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக மின் கம்பிகளில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார்
தெரிவித்தனர்.
தோட்டத் தொழிலாளர்கள் இணைந்து தீயை கட்டுப்படுத்திய போதிலும் அப்பகுதியில் பலத்த காற்று வீசியதால் தீயை கட்டுப்படுத்துவதில் கடும் தடைகள் ஏற்பட்டன.
தீ விபத்தில் வீடுகளை இழந்தவர்கள் பல பொது இடங்களுக்கு தோட்ட அதிகாரிகளால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் மாவட்ட செயலாளருடன் இணைந்து அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் தேவையான வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை
எடுத்துள்ளனர்.
தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக