siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 12 ஜூலை, 2023

கண்டி வைத்தியசாலை சிகிச்சையால் இளம் யுவதி பரிதாபமாக மரணம்

கண்டி, பேராதனை போதனா வைத்தியசாலைக்கு வயிறுவலிக்கு சிகிச்சை பெற வந்த 21 வயதுடைய யுவதியொருவர் வைத்தியசாலையில் ஊசி போடப்பட்ட சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பேராதனை போதனா வைத்தியசாலையும் பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.வயிற்றில் 
ஏற்பட்ட உபாதை
பொத்தப்பிட்டிய அலகல்ல பகுதியைச் சேர்ந்த சாமோதி சந்தீபனி ஜயரத்ன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யுவதிக்கு வயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக நேற்று முன்தினம் கெட்டப்பிட்டி அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அம்புலன்ஸ் மூலம் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அவர் நேற்று காலை 10.00 மணியளவில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று 
வந்த நிலையில், தாதியொருவர் இரண்டு ஊசிகளை 
செலுத்தியுள்ளார்.
அதனையடுத்து அவரது உடல் திடீரென நீல நிறமாக மாறி உயிரிழந்துள்ளார் என்று சிறுமியின் தாய் மாயா இந்திராணி தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக வைத்தியசாலையில் வழங்கப்படும் மருந்துகள் காரணமாக பல பெண்கள் உயிரிழந்துள்ளமை நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக