டெல்லி ரோகிணி பகுதியில் உள்ள ஒரு உடற்பயிற்சி நிலையத்தில் சாக்சன் என்ற 24 வயது வாலிபர் சமீபத்தில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தார். ஓட்டப் பயிற்சிக்காக மின்சாரத்தால் இயங்கும் டிரெட்மில்லில் ஏறி ஓடிக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. பலத்த மின்தாக்குதலுக்கு ஆளான அவர் பரிதாபமாக இறந்துள்ளார்.
மின்சாரம் பாய்ந்ததே அவரது இறப்புக்கு காரணம் என பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக உடற்பயிற்சி நிலைய மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. இறந்துபோன வாலிபர் சாக்சன் பிடெக் படித்துள்ளார். குருகிராமில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக