இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் 6 மில்லியன் 96,946 ரூபா வரி வருமானமாக பெறப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆனால் கடந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் 361,832 மில்லியன் ரூபாவே வசூலிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம்
தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வசூலான வரி வருவாய் 93 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருவதாலும், நாட்டில் வரிக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றங்களாலும் வரி வருமானம் அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக