மலர்வு-02-05.1942-உதிர்வு-26-06-2022.-
திதி -15-07-2023.சனிக்கிழமை இன்று
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் நவற்கிரியை வசிப்பிடமாகக்கொண்டிருந்த திருமதி ஆ .க.சுப்பிரமணியம் சின்னமணி (சின்னம்மா ) அவர்களின்
முதலாம் .ஆண்டு நினைவஞ்சலி 15-07-2023.இன்று அன்னார் காலம்சென்ற திரு.ஆ .க . சுப்பிரமணியம்(மணிஐயா)
அவர்களின் பாசமிகு மாணவியரும் காலம் சென்றவர்களான தம்பு மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும்
காலம்சென்றவர்களான ஆறுமுகம் கந்தையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்
சென்றவர்களான துரைராஜா செல்வராஜா ஞானமணி வித்திலமணி ஜெயரத்தினம்
பாலசிங்கம் மற்றும் சிவலிங்கமணி ஆகியோரின் அன்புச்சகோதரியும் தர்மசிறி (இலங்கை )தர்மபூபதி (சுவிஸ் )தர்மதேவி((ஜேர்மன் ) தர்மதேவன்(கனடா )
தர்மசாந்தினி (நோர்வே )காலம்சென்ற தர்மகுமார் ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
.இங்கனம் -குடும்பத்தினர்.
முகத்தைக் காணும் முன்பே
நேசிக்கத் தெரிந்தவளே
துன்பம் துயரம் அறியாது
எமை அன்போடு வளர்த்தவளேஉடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் தந்த எம் தெய்வமே
பண்பின் உயர்விடமாய்
பாசத்தின் பிறப்பிடமாய்
அன்பிற்கு இலக்கணமாய்
இருந்த எம் குலவிளக்கேபத்து மாதம் பாடுபட்டு பத்தியங்கள்
பல காத்து பத்திரமாய் எமைப்
பெற்றெடுத்தவளேஆயிரம் சொந்தங்கள் அணைத்திட
இருந்தாலும் அன்னயே உனைப்போன்று
அன்பு செய்ய யாரும் இல்லையே
இவ்வுலகில்ஆண்டொண்றாகினும் உன் நினைவது
எமை விட்டு அகலாமல் என்றும்
உனது நினைவைச் சுமர்ந்தவர்களாய்..!உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம்
வல்ல அந்த இறைவனை பிரார்த்திகின்றோம்....
உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டும்
உங்கள் பிள்ளைகள், சகோதரர்கள் மருமக்கள் ,
பெறாமக்கள், பேரப்பிள்ளைகள், புட் ட ப்பிள்ளைகள்
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்
ஓம்சாந்தி சாந்தி சாந்தி
தகவல்: குடும்பத்தினர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக