siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 29 பிப்ரவரி, 2024

இலங்கைக்கு நாளைய தினத்திற்கு பின்னரே சாந்தனின் உடல் வரப்படும்

இந்தியாவில்  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்டு உடல் நலக் குறைவால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தனனின் உடல் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குப் பிறகே இலங்கைக்கு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சாந்தனின் சகோதரர் தனது சமூக வலைத்தள தளத்தில் பதிவிட்டுள்ளார். தனது அண்ணாவின் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்படுவது வெள்ளிக்கிழமைக்குப் பிறகே சாத்தியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும்,...

புதன், 28 பிப்ரவரி, 2024

பிரான்ஸ் ஈபிள் கோபுர ஊழியர்கள் பாரம் துாக்கியில் சிக்கித்தவித்துள்ளனர்

பிரான்ஸ்  ஈஃபிள் கோபுர ஊழியர்கள் கோபுரத்துக்கு நடுவே சிக்குண்டு இரவு முழுவதும் தவித்துள்ளனர். இச்சம்பவம் இடம் பெற்று பத்து நாட்களுக்கு மேலாகியுள்ள நிலையில், அது தொடர்பான தகவல்கள் தற்போதே வெளியாகியுள்ளன. ஈஃபிள் கோபுரத்தின் இரண்டாவது தளத்தில் பயணிபுரியும் ஊழியர்கள் மூவர், பெப்ரவரி 16 - 17 ஆம் திகதிக்குட்பட்ட இரவில், கோபுரத்தில் இருந்து கீழே இறக்க முற்பட்டனர். பாரம்தூக்கியில் அவர்கள் கீழிறங்க முயற்சித்த வேளையில் அவர்கள் பாரம்தூக்கிக்கிக்குள் சிக்கிக்கொண்டனர். பாரம்...

செவ்வாய், 27 பிப்ரவரி, 2024

யாழ் புத்தூர் கலைமதி பகுதியில் தீக்கிரையானதில், பெறுமதியான பொருட்கள் எரிந்துள்ளன

யாழ் புத்தூர் கலைமதி பகுதியில்.26-02-2024. திங்கட்கிழமை இரவு வீடொன்று தீக்கிரையானதில், பெறுமதியான பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் என்பன தீயில் எரிந்துள்ளன.வீட்டார் , அயலவர்களின் உதவியுடன் தீயினை கட்டுப்படுத்த முயற்சித்த போதும் அது பயனளிக்காததால் யாழ்.மாநகர சபை தீயணைப்பு படையினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து , தீயணைப்பு படையினரால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது .குறித்த தீ விபத்து, மின் கசிவு காரணமாக ஏற்ப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின்...

திங்கள், 26 பிப்ரவரி, 2024

நாட்டில் அம்பாறையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து

நாட்டில் அம்பாறை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று கால்வாயில் வீழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தின் போது பேருந்தில் ஏறக்குறைய 30 சிறுவர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் ஐந்து மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில், அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பாறை உதெனிய ரணவிரு மாவத்தைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார்...

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

கடைக்கு முன்னாள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கு யாழில் தீவைப்பு

யாழ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள நகை கடைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீமூட்டி எரிக்கப்பட்டது.  தீ மூட்டியவர், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை உருட்டிச் செல்வது அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. முன்பகை காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவத்தில் தொடர்புபட்டவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு...

சனி, 24 பிப்ரவரி, 2024

நாட்டில் வட்டவளையில் சிசுவை குழி தோண்டி புதைத்த தாய் கைது

நாட்டில் வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை தோட்டத்தில் வீடு ஒன்றின் பின் பகுதியில் குழி தோண்டி புதைக்கப்பட்டிருந்த சிசு ஒன்றின் சடலம் (22) அன்று தோண்டியெடுக்கப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர். வட்டவளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு விரைந்து செயல்பட்ட வட்டவளை பொலிஸார் துணி ஒன்றில் சுத்தி புதைக்கப்பட்டிருந்த சிசுவின் சடலத்தை மீட்டுள்ளனர். அதேநேரத்தில் இந்த சிசுவை பெற்ற தாய் தலைமறைவாகிருந்த...

வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

ஆதாரம் இல்லாததால் உலகின் வயதான நாய்க்கு வழங்கப்பட்ட சாதனை பட்டம் பறிப்பு

போபி என்ற நாயின் உண்மையான வயது தொடர்பான சர்ச்சையின் காரணமாக, உலகின் மிக வயதான நாய் என்ற பட்டம் மரணத்திற்குப் பின் பறிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு பிப்ரவரியில் வழங்கப்பட்ட பட்டத்தை வழங்குவதற்கு, போபியின் வயதை நிரூபிக்க மைக்ரோசிப் போதுமான ஆதாரம் இல்லை என்று அமைப்பு தெரிவித்துள்ளது.எந்த நாய் புதிய சாதனை படைத்தது என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லை என்று GWR கூறியது. போபி போர்ச்சுகலின் கான்குவீரோஸைச் சேர்ந்த ரஃபீரோ டோ அலென்டெஜோ ஆவார்.இனம் பொதுவாக 12-14 ஆண்டுகள்...

வியாழன், 22 பிப்ரவரி, 2024

குறுந்தொகை வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் பலர் வைத்தியசாலையில்

நுவரெலியாவில் நானுஓயா ரடெல்ல குறுந்தொகை வீதியில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சுமார் 20 பேர் வரை காயம் அடைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்தளையில் இருந்து சிவனொளிபாதமலை நோக்கிய பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துகுள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து...

புதன், 21 பிப்ரவரி, 2024

நாட்டில் ஆறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் பல மாவட்டங்களில் வெப்பநிலை திடீரென அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 6 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை வியாழக்கிழமை வடமேற்கு மாகாணம், கம்பஹா, கொழும்பு, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டம் மாவட்டங்களில் அதிக வெப்பநிலை பதிவாகும் என்று தெரிவித்துள்ளது..என்பது குறிப்பிடத்தக்கது      இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>...

செவ்வாய், 20 பிப்ரவரி, 2024

அகதிகள் படகு துனிசியாவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒன்பது பேர் பலி

அரசியல் ஸ்திரத்தன்மையற்ற லிபிய நாட்டின் கடற்கரையில் இருந்து ஐரோப்பாவுக்கு சிலர் படகு ஒன்றில் பயணம் மேற்கொண்டனர். அந்த படகில் பாகிஸ்தான், எகிப்து, சிரியா மற்றும் வங்காளதேச நாட்டை சேர்ந்தவர்களும் பயணித்து உள்ளனர்.மத்திய தரைக்கடல் வழியே சென்ற அந்த அகதிகளின் படகு துனீசியா கடலோர பகுதியில் திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. படகில் 53 பேர் இருந்தனர் என கூறப்படுகிறது. பலரின் நிலைமை என்னவென தெரியவில்லை. இதுபற்றி வங்காளதேச அரசு வெளியிட்ட...

திங்கள், 19 பிப்ரவரி, 2024

நாட்டில் ஆராச்சிக்கட்டுவ பகுதியில் ரயிலுடன் மோதி பெண் ஒருவர் உள்பட இரு குழந்தைகள் பலி

நாட்டில் ஆராச்சிக்கட்டுவ மையாவ பகுதியில் மோட்டார் சைக்கிள் புகையிரதத்துடன் மோதியதில் பெண் ஒருவரும் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம்.19-02-2024. இன்று  பிற்பகல்  இடம்பெற்றுள்ளது. தனது குழந்தையையும் மற்றுமொரு குழந்தையையும் பயிற்சி வகுப்புக்கு அழைத்துச் சென்ற தாய் பயணித்த மோட்டார் சைக்கிள் ரயிலுடன்  மோதி விபத்துக்குள்ளானது.  சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார்...

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2024

நாட்டில் ஹட்டனில் யாத்திரைக்கு வந்த பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து

நாட்டில் ஸ்ரீபாத யாத்திரைக்கு வந்தவர்கள் பயணித்த வேனும், பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து இன்று (18.02) பிற்பகல் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் குனிகத்தேன மில்லகஹமுல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. கம்பஹா பகுதியிலிருந்து யாத்திரிகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் ஒன்றும் மாத்தறை பகுதியிலிருந்து யாத்திரிகர்கள் குழுவை ஏற்றிச்...

சனி, 17 பிப்ரவரி, 2024

ராமுத்தேவன்பட்டியில் பட்டாசு ஆலை விபத்தில் எட்டு பேர் உயிரிழப்பு

தமிழ் நாட்டில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த வெம்பக்கோட்டை அருகே ராமுத்தேவன்பட்டியில் பட்டாசு ஆலை விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில் 4 காயம் அடைந்துள்ளனர். மேலும் பட்டாசு ஆலை விபத்தில் 3 அறைகள் தரைமட்டமாயின. பட்டாசு ஆலை வெடிவிபத்து நடந்த இடத்துக்கு வெம்பக்கோட்டையில் இருந்து தீயணைப்புத்துறை வாகனங்கள் விரைந்துள்ளன.&nb...

வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

அமரர் நடராஜா அற்புதராஜா 10ம் ஆண்டு நினைவஞ்சலி 16.02.2024

  தோற்றம் : 17 ஒக்ரோபர் 1957 — மறைவு : 8 மார்ச் 2014 திதி : நாள்.16.02-2024..வெள்ளிக்கிழமை இன்று  யாழ். அச்சுவேலி தோப்பைப்பிறப்பிடமாகவும், நவற்கிரியிலும்  தோப்பையும்  வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர்   நடராஜா அற்புதராஜா அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவஞ்சலி .திதி   அன்னார் திருமதி அற்புதராஜா ராஜேஸ்வரி (வசந்தி ) அவர்களின் அன்புக் கணவரும் சிந்துஜா  -இந்துஜன் - இந்துயா .செந்துஜா ஆகியோரின்...

வியாழன், 15 பிப்ரவரி, 2024

ஆஸ்டின் நகரில்மருத்துவமனைக்குள் கார் புகுந்து மோதிய ஒருவர் பலி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஆஸ்டின் நகரில் மருத்துவமனை ஒன்றின் அவசரகால அறைக்குள் கார் ஒன்று திடீரென புகுந்தது. அந்த அவசரகால அறையின் காத்திருப்பு அறையில் இருந்தவர்கள் மீது மோதியது. இந்த சம்பவத்தில் முதியவர்கள் 3 பேர் மற்றும் 2 இளைஞர்கள் என 5 பேர் படுகாயமடைந்தனர்.அவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். காரை ஓட்டி வந்த பெண் மிச்செல்லே ஹாலேவே (வயது 57) என அடையாளம் காணப்பட்டார். அவர் காரிலேயே காயத்துடன் கிடந்துள்ளார். அவருக்கு...

புதன், 14 பிப்ரவரி, 2024

நாவற்குழி பகுதியில் A9 வீதியில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

அரச பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காயமடைந்ததுடன், பயணிகள் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.குறித்த விபத்து இன்று மாலை 4 மணியளவில் யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது.  யாழ்ப்பாணத்திலிருந்து நாவற்குழியில் உள்ள தனது வீட்டுக்கு சமிக்கை விளக்கை ஒளிரவிட்டு திரும்புகையில், அதே திசையில் பயணித்த பேருந்து மோதியுள்ளது.  குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து...

செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

நாட்டில் அரச மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு முன்னேற்றம் இல்லை என சுட்டிக்காட்டு

நாட்டில் அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு கடுமையாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாட்டில் சுமார் முந்நூறு வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், இது நாளுக்கு நாள் மோசமாகி வருவதாகவும் கூறப்படுகிறது.  சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளின் தலைமையில் அடிக்கடி கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், மருந்துப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும்...

திங்கள், 12 பிப்ரவரி, 2024

கொக்காவில் பகுதியில் அரச பேருந்துடன் மோதி குடைசாய்ந்த வாகனம் நால்வர் படுகாயம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்காவில் பகுதியில் அரச பேருந்து ஒன்றுடன், அரச பேருந்து ஒன்று மோதி12-02-2024. இன்று   விபத்திற்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் 06 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துணுக்காயிலிருந்து காரைநகர் நோக்கி பயணித்த அரச பேருந்து எதிரே பயணித்த இராணுவ ரக் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில், இராணுவத்தினர் பயணித்த வாகனம் குடைசாய்ந்துள்ளது. இதில்...

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024

மரண அறிவித்தல் திரு.சின்ராஜா பாலசிங்கம் (சிங்கம் ) 10.02.24

துயர் பகிர்வு-10-04-1952-- உதிர்வு -10-02-2024யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் நவற்கிரியை வாழ்விடமாகவும்  தற்போது நல்லூர்  பண்டாரக்குளம் மேற்கு ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட  திரு.சின்ராஜா  பாலசிங்கம் (சிங்கம் )அவர்கள் 10-02-2024 .அன்று  இறைவனடி சேந்தார். அன்னார். காலஞ்சென்ற சின்ராஜா சிவகாமி தம்பதியினரின் கனிஷ்டபுதல்வரும்  காலஞ்சென்ற செல்லத்துரை வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகனும் சத்தியேஸ்வரி...

சனி, 10 பிப்ரவரி, 2024

தனியார் விமானம் அமெரிக்காவில் கார்கள் மீது மோதி இருவர் பலி

அமெரிக்காவில் தனியார் விமானம் ஒன்று தேசிய சாலையில் கார்கள் மீது மோதி விபத்திற்குள்ளானதில் இரண்டு பேர் பலியாகினர். புளோரிடா மாகாணத்தில் the Bombardier Challenger 600 எனும் தனியார் விமானம் ஒன்று, நெடுஞ்சாலையில் கார்கள் மீது மோதி விபத்திற்குள்ளானது. Naples-யின் Pine Ridge சாலைக்கு அருகிலுள்ள Collier கவுண்டி பகுதியில் நடந்த இந்த விபத்தில் விமானம் தீப்பற்றி எரிந்தது.இந்த விபத்தில் இருவர் பலியானதாக the Collier County Sheriff's அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது....

வெள்ளி, 9 பிப்ரவரி, 2024

நாட்டில் தோப்பூர் பகுதியில் மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன்

நாட்டில் .மூதூர்- தோப்பூர் பகுதியில் கணவனால் அவரது மனைவி கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பத் தகராறு காரணமாக குறித்த பெண் கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.சந்தேகநபரான கணவர், மனைவியின் ஆடைகளை பயன்படுத்தி கழுத்தை நெரித்து கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கொலையை செய்த 33 வயதுடைய சந்தேகநபரான கணவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொலைச்...

வியாழன், 8 பிப்ரவரி, 2024

பாகிஸ்தானில் தேர்தல் தினத்தன்று நடந்த வன்முறை சம்பவங்களில் ஒன்பது பேர் உயிரிழப்பு

பொருளாதார நெருக்கடியினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானில் புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பு நிறைவுக்கு வந்துள்ளது.காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நீடித்தது. வாக்கெண்ணும் பணிகள் தற்சமயம் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், நாட்டின் பொருளாதாரச் சுமையிலிருந்து மீள உதவும் அடுத்த தலைவர் யார் என்பதை அறிய அனைவரும் பெரும் ஆவலுடன் உள்ளனர்.மேலும் இன்றைய நாளில் நாடு முழுவதும் பல...

புதன், 7 பிப்ரவரி, 2024

யாழ் புத்தூரில் சட்டவிரோத மணல் மண்ணை ஏற்றி சென்ற டிப்பர் மீது துப்பாக்கி சூடு

யாழ் .- புத்தூர் பகுதியில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனம் மீது,07-02-2024. இன்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.சட்டவிரோத மணலுடன் , டிப்பர் வாகனமொன்று வேகமாக பயணிப்பதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , புத்தூர் பகுதியில் அதனை வழிமறித்துள்ளனர்டிப்பர் சாரதி வாகனத்தை நிறுத்தாது சென்றமையால் , பொலிசார் அதன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். அப்போது, டிப்பர் வாகனம் வீதியில் குடைசாய்ந்தது.சட்டவிரோத...

செவ்வாய், 6 பிப்ரவரி, 2024

ஆஸ்திரேலிய எழுத்தாளருக்கு சீனாவில் மரண தண்டனை பிறப்பிப்பு

சீன வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய எழுத்தாளர் யாங் ஹெங்ஜுனுக்கு சீன நீதிமன்றம் இடைநிறுத்தப்பட்ட மரண தண்டனை .உளவு பார்த்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, சீன நீதிமன்றம் அவருக்கு இடைநிறுத்தப்பட்ட மரண தண்டனை விதித்துள்ளது.அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர், இந்த தண்டனை இடைநிறுத்தப்பட்ட தண்டனை என்றும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆயுள் தண்டனையாக மாற்ற முடியும் என்றும் கூறினார்.அறிஞரும் நாவலாசிரியருமான டாக்டர்...

திங்கள், 5 பிப்ரவரி, 2024

மரம் முறிந்து விழுந்ததில் கம்பளையில் மாணவர் ஒருவர் மரணம்

இலங்கை  கம்பளையில் உள்ள  பாடசாலை ஒன்றில் மரம் ஒன்று சரிந்து முறிந்து விழுந்ததில் ஐந்து வயது மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளனர். ஆபத்தான நிலையில் இருந்த மாணவர் ஒருவர் கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நர்சரி பிரிவில் கல்வி பயிலும் 30 மாணவர்கள் விளையாடிக்கொண்டிருந்தபோது மேற்படி மரம் முறிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் குறித்த...