siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 30 ஏப்ரல், 2024

வாளுடன் லண்டனில் நடமாடிய நபரால் பதற்றம் சிறுவன் படுகொலை

லண்டனில் இன்று (30.04) இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் 13 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காயமடைந்துள்ளனர். காலை 7 மணியளவில் 36 வயதுடைய நபர் ஒருவர் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளார். வடகிழக்கு லண்டனில் உள்ள ஹைனால்ட், டியூப் ஸ்டேஷன் அருகே நடந்த இந்த தாக்குதலில் அதிகாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதல்தாரி கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறி...

திங்கள், 29 ஏப்ரல், 2024

பேருந்து விபத்தில் மெக்ஸிகோவில் பதின் எட்டு பேர் உயிரிழப்பு

மெக்சிகோவில் பேருந்து விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த விபத்து 28-04-2023.அன்று  இடம்பெற்றுள்ளது. சான் லூயிஸ் டி லா பாஸ் பகுதியில் இருந்து சல்மா சரணாலயத்திற்கு சென்று கொண்டிருந்த பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். என்பதும் குறிப்பிடத்தக்கது &nb...

ஞாயிறு, 28 ஏப்ரல், 2024

நாட்டில் தமிழ் மக்களை படுகொலை செய்த ஐந்து பொலிசாருக்கு மரணதண்டனை

நாட்டில்  கந்தளாய் - பாரதிபுரம் கிராமத்தில் 28 வருடங்களுக்கு முன்னர் 8 தமிழ் மக்களைக் கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட ஐந்து பொலிஸாருக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.கடந்த.26-04-2024. வெள்ளிக்கிழமை அனுராதபுரம் மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொண்டபோதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.மேல் நீதிமன்ற நீதிபதி மனோஜ் தல்கொடபிட்டியவினால் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ஐந்து...

சனி, 27 ஏப்ரல், 2024

கார் விபத்தில் அமெரிக்காவில் மூன்று இந்திய பெண்கள் மரணம்

அமெரிக்காவில் கார் ஒன்று மரத்தின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் குஜராத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.குஜராத்தின் அனந்த் மாவட்டத்தை சேர்ந்த ரேகாபென் படேல், சங்கீதாபென் படேல் மற்றும் மனிஷாபென் படேல் ஆகியோர் அமெரிக்காவில் உள்ள தெற்கு கரோலினாவில் உள்ள கிரீன்வில்லி மாகாணத்தில் உள்ள காரில் சென்றுக் கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மோதி விபத்துக்குள்ளானது.இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், " வேகமாக வந்த கார் ஒன்று...

வெள்ளி, 26 ஏப்ரல், 2024

யாழ் வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை: மேலுமொருவர் கைது

யாழ் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி காரைநகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு ,வீடு திரும்பிக்கொண்டிருந்த தம்பதியினரை பொன்னாலை பாலத்திற்கு அருகில் உள்ள கடற்படை முகாமிற்கு முன்பாக வைத்து வன்முறை கும்பல் கடத்தி சென்று , கணவனை சித்திரவதைக்கு...

வியாழன், 25 ஏப்ரல், 2024

வெப்பமான காலநிலையால் தாய்லாந்தில் முப்பது பேர் உயிரிழப்பு

தாய்லாந்தில் இந்த ஆண்டு அதிக வெப்பமான காலநிலை காரணமாக 30 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தெற்கு மற்றும் தென்கிழக்காசியா முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் கடுமையான வெப்பம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தாய்லாந்தின் பாங்கொக்கில் வெப்பநிலை 52 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.ஷநிலவும் காலநிலையை கருத்திற் கொண்டு குறித்த பிரதேசத்தில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக...

புதன், 24 ஏப்ரல், 2024

எச்சரிக்கை காட்டுத்தீ அபாயத்தில் கனடா: பெடரல் அரசு விடுத்துள்ளன

வழக்கத்துக்கு மாறாக, குளிர்காலத்தில் உஷ்ணம், அதிகரித்து வரும் வறட்சி மற்றும் எதிர்வரும் மாதங்களில் வழக்கத்தைவிட வெப்பம் அதிகமாக இருக்கும் என எச்சரித்துள்ள வானிலை ஆராய்ச்சி மையம் என பல காரணங்களால், மீண்டும் ஒரு பயங்கர அழிவை ஏற்படுத்தும் காட்டுத்தீ சூழலை கனடா எதிர்கொள்ளும் அபாயம் உள்ளதாக பெடரல் அரசு எச்சரித்துள்ளது.கடந்த ஆண்டில் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள மேற்கு கெலோனா நகரில் வீடுகளை அழித்து பெரும் சேதத்தையும் மக்களுக்கு கடும்...

செவ்வாய், 23 ஏப்ரல், 2024

நாட்டில் எரிவாயு விலை குறைப்பு சாத்தியமா முதித பீரிஸ் வெளியிட்ட தகவல்

நாட்டில் எரிவாயு இறக்குமதி செய்யும் நாடுகள் தொடர்பான நெருக்கடிகள் தீர்க்கப்பட்டால் உலக சந்தையில் எரிவாயுவின் விலை குறையும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.  அதற்கிணங்க, இந்நாட்டு மக்களுக்கு நன்மைகள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது  இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>...

திங்கள், 22 ஏப்ரல், 2024

நாட்டில் பண்டாரகமவில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம்

நாட்டில் பண்டாரகம கலனிகம நெடுஞ்சாலை பாலத்திற்கு அருகில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக பண்டாரகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. அவர் 05 அடி 4 அங்குல உயரம் கொண்ட உயரமானவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவர் நீல நிற ஸ்லீவ்லெஸ் சட்டை  அணிந்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர். சம்பவம்...

ஞாயிறு, 21 ஏப்ரல், 2024

நாட்டில் எல்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து மூவர் பலி

 நாட்டில் எல்பிட்டிய – அவிட்டாவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.  முச்சக்கர வண்டியொன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் 68 வயதான முச்சக்கரவண்டி சாரதியும் அவரது 10 வயது பேரனும் ஏழு வயது பேத்தியும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விபத்து தொடர்பில் லொறியின் சாரதி...

சனி, 20 ஏப்ரல், 2024

நாட்டில் ரம்பே பகுதியில் மோட்டார் சைக்கள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாட்டில் ரம்பே - மல்சிறிபுர வீதியில் பன்சியகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  மூவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.  இந்த விபத்து 19-04-2024.அன்று  இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  விபத்தில் சாரதியும் பின்னால் பயணித்தவரும் படுகாயமடைந்துள்ளதுடன், பொல்பித்திகம...

வெள்ளி, 19 ஏப்ரல், 2024

இரு இந்திய மாணவர்கள் ஸ்காட்லாந்தில் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஸ்காட்லாந்தின் பெர்த்ஷயரில் ஆறுகள் சங்கமிக்கும் வனப்பகுதியான லின் ஆப் டம்மெல் என்ற இடத்திற்கு சிலர் உல்லாச பயணம் மேற்கொண்டனர். அங்கு சென்றதும் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். அப்போது, இந்தியாவைச் சேர்ந்த 2 மாணவர்கள் திடீரென தவறி ஆற்றில் விழுந்து மூழ்கினர். இதுபற்றி உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து இரண்டு மாணவர்களையும் சடலமாக மீட்டனர். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு...

வியாழன், 18 ஏப்ரல், 2024

மரண அறிவித்தல் திரு செல்லையா திருஞானசம்பந்தன் (சம்பந்தன்)

துயர் பகிர்வு-- உதிர்வு -17-04-2024யாழ் தோப்பு  அச்சுவேலியை பிறப்பிடமாகவும், கனடா மார்க்கம் ஒன்றாரியோவை வதிவிடமாகவும் கொண்ட  திரு செல்லையா திருஞானசம்பந்தன் (சம்பந்தன்)அவர்கள் .17-04-2024.புதன் கிழமை அன்று  Markham Ontario வில்  இறைவனடி சேந்தார்.  அன்னாரின் ஈமக்கிரியை பற்றிய விபரங்கள் இந்த இணையத்தில்                               ...

புதன், 17 ஏப்ரல், 2024

வவுனியாவில் குழந்தை மீது கத்தி வைத்து பயமுறுத்தி நகைகள் மோட்டார் சைக்கி ல் வழிப்பறி

வவுனியா நகரில் மோட்டார் சைக்கில் சென்றவர்களை வழிமறித்து அவர்களின் குழந்தை மீது கத்தியை வைத்து தயாரை மிரட்டி நகைகள் பறித்தமையுடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிலையும் அபகரித்துச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனை முன்பாகவுள்ள கடவுச்சிட்டு அலுவலகத்திற்கு செல்லும் வீதியில்.17-04-2024. இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பெண்மணி கடவுச்சீட்டு காரியாலத்திற்கு...

செவ்வாய், 16 ஏப்ரல், 2024

நாட்டில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள் தொடர்பானா அதிர்ச்சி தகவல்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோயாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் கணிசமான அளவு உணவுப் பொருட்கள் தரமற்றவை என வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்க்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார். மேலும், சில நேரங்களில் நோயாளிகளின் உணவுக்காக வழங்கப்படும் காய்கறிகள் ஓரளவு அழுகிய நிலையில் காணப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் தேநீருக்கு பயன்படுத்தப்படும் மாவு மற்றும் சீனியும் காலாவதியாகவும்...

திங்கள், 15 ஏப்ரல், 2024

யாழில் மீண்டும் பரவும் கொரோனாத் தொற்று: பெண் ஒருவர் மரணம்

மீண்டும் நீண்ட காலத்துக்குப் பின்னர் கொரோனோ தொற்று காரணமாக யாழ் மாவட்டத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் இருந்து தனக்கான ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை வந்த 62 வயதான பெண்ணே இவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த பெண் வட்டுக்கோட்டை அராலியில் தங்கியிருந்த நிலையில் காய்ச்சல் காரணமாக இரண்டு நாட்களாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து...

ஞாயிறு, 14 ஏப்ரல், 2024

நாட்டில் மின்னல் தாக்கம் பல மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் பரவலாக இடியுடன் கூடிய மழையுடன் கூடிய பலத்த மின்னலுக்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு...

சனி, 13 ஏப்ரல், 2024

நாட்டில் கரையோர ரயில் சேவை தாமதமாகும் என அறிவிப்பு

நாட்டில் கடலோர ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தெற்கு களுத்துறை ரயில் தடம் புரண்டதன் காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது  இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>...

வெள்ளி, 12 ஏப்ரல், 2024

முரவத்தையில் தாய்க்கு தெரியாமல் சைக்கிளில் சென்ற சிறுவன் உயிரிழப்பு

தாயிக்கு தெரியாமல் துவிச்சக்கர வண்டியில் பயணித்த 9 வயது சிறுவன் ஒருவன் மொரட்டுவை - முரவத்தை ரயில் கடவைக்கு அருகில் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர், மொரட்டுவை - மொரட்டுவெல்ல - க்ளோவியஸ் மாவத்தையில் வசித்து வந்த மொரட்டுவை ஜனஜய பாடசாலையில் நான்காம் ஆண்டில் கல்வி கற்கும் எம். ஆர்.ரந்தரு என்று மாணவர் ஆவார். ரயிலை இயக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ரயிலின் பாதுகாப்பு கடவையும் மூடப்பட்டிருந்தது.  இந்நிலையில்...

வியாழன், 11 ஏப்ரல், 2024

அமரர் திரு,ஆ ,க,சுப்பிரமணியம்.13ம் ஆண்டு நினைவஞ்சலி 11.04.2024

மண்ணில் : 06- 02 1932 — விண்ணில் : 06 04 2011திதி : 11 -04- 2024.வியாழக்கிழமை இன்று  யாழ். மாவிடடபுரத்தை பிறப்பிடமாகவும், நவற்கிரி புத்தூரை வசிப்பிடமாகவும் கொண்ட.அமரர் திரு ..(ஆ.க) கந்தையா. சுப்பிரமணியம் (மணிஐயா  ) அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.பதின் மூன்று ஆண்டுகள் கழிந்தும் என்றும் எம்மோடு இருக்கும் ஏந்தலே!!பதின் மூன்று ஆண்டுகள் போனதையா!ஏங்கியே அழுகின்றோம் ஏந்தலே!!தாங்கியே பிடிக்க தலைவனின்றிதவிக்கின்றோம் ஐயா!.இன்று நீங்கள் இல்லாமல்தனியாய்...

புதன், 10 ஏப்ரல், 2024

லவுசனே Lausanne) சுவிஸ் ரயில் நிலையத்திற்கு அருகில் சடலம் ஒன்று கண்டெடுப்பு

சுவிட்சர்லாந்தின் Lausanne ரயில் நிலையத்துக்கருகில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  சடத்திற்கு அருகில் இரத்தக்கரை காணப்படும் காட்சிகள் பிரபல ஊடகமான Blick செய்தித்தாளில் வெளியிடப்பட்டுள்ளது. பொலிசார் அந்த இடத்தில் கூடாரம் அமைத்து சோதனை நடத்திவரும் காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக பொலிசாரும் நீதிமன்ற அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்...

செவ்வாய், 9 ஏப்ரல், 2024

நாட்டில் மட்டக்களப்பில் வீட்டில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

நாட்டில் மட்டக்களப்பு - திருமலை வீதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் வீட்டில் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். திருமலை வீதியை வசிப்பிடமாகக் கொண்ட சசிக்குமார் டினேஸ் (வயது 19) எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.08-04.2024.திங்கட்கிழமை தனிமையில் தனது வீட்டில் வெல்டிங் - இரும்பு ஒட்டு வேலைகளை செய்து கொண்டிருந்த போதே இவர் மின்சாரம் தாக்கி மயக்கிய நிலையில் இருந்துள்ளார். சகோதரி அயலவர்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற...

திங்கள், 8 ஏப்ரல், 2024

இலங்கை விமானப்படை வீரர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு

பாதுக்கை - அங்கமுவ பிரதேசத்தில் நேற்றிரவு பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது, ​​பொலிஸ் வீதித் தடைக்கு அருகில், உத்தரவை மீறி மோட்டார் சைக்கிள் ஒன்று சென்றதுடன் அதனை செலுத்தியவர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.இந்நிலையில் பொலிஸார் பதிலுக்கு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து...

ஞாயிறு, 7 ஏப்ரல், 2024

நாட்டில் சிறைச்சாலைகளில் ஐம்பது கைதிகள் உயிரிழப்பு

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் 50 கைதிகள் உயிரிழந்துள்ளனர். தவறான முடிவு, சுகவீனம் மற்றும் தாக்குதல்கள் என்பனவற்றால் இவர்கள் உயிரிழந்துள்ளனர் என சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் காமினி பி .திசாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த வருடம் சிறைச்சாலைகளுக்குள் 209 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது  &nb...

சனி, 6 ஏப்ரல், 2024

வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் ஹிக்கடுவை கடலில் நீராடிய நபர் நீரில் மூழ்கி பலி

 ஹிக்கடுவை நகரத்துக்கு அருகில் உள்ள கடலில் நீராடிக்கொண்டிருந்த வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்தவர் 57 வயதுடைய லிதுவேனிய பிரஜையாவார். இவர் ஹிக்கடுவை நகரத்திற்கு அருகில் உள்ள கடலில் நீராடிக்கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கியுள்ள நிலையில் சம்பவ இடத்தில் இருந்த உயிர்காப்பாளர்கள் இவரை மீட்ட்டு பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.என்பது...