நாட்டில் எல்பிட்டிய – அவிட்டாவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கர வண்டியொன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்
தெரிவித்தனர்.
இந்த விபத்தில் 68 வயதான முச்சக்கரவண்டி சாரதியும் அவரது 10 வயது பேரனும் ஏழு வயது பேத்தியும் உயிரிழந்துள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக