நீண்ட காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ஊடகவியலாளர்
ஒருவர் 03-04-2024.அன்று திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். சங்கானை பகுதியை சேர்ந்த 29 வயதுடைய நடேசு ஜெயபானுஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
மகன் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தவரின் தாயாரும் தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் வீட்டில் இருந்தவர்களால் காப்பாற்றப்பட்டு , சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார் .
குறித்த இளைஞன் , யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு இயங்கும் ஊடக நிறுவனம் ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் , ஊடகவியலாளராகவும் கடமையாற்றி வந்தவர் என்பதாகும்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக