கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோயாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் கணிசமான அளவு உணவுப் பொருட்கள் தரமற்றவை என வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்க்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.
மேலும், சில நேரங்களில் நோயாளிகளின் உணவுக்காக வழங்கப்படும் காய்கறிகள் ஓரளவு அழுகிய நிலையில் காணப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு
வழங்கப்படும் தேநீருக்கு பயன்படுத்தப்படும் மாவு மற்றும் சீனியும் காலாவதியாகவும் காணப்படுகின்றன.
சில சந்தர்ப்பங்களில், சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனம் உணவுக்கு தகுதியற்ற மீன்களுடன் உணவை வழங்குகின்றன.
இது குறித்து பல ஊழியர்கள் முறைப்பாடு செய்துள்ளதாகவும் இது தொடர்பில் சுகாதார அமைச்சினால் முடிவெடுக்கப்பட வேண்டும்
எனவும் வைத்தியசாலை அதிகாரிகளால் எதுவும் செய்ய
முடியாது எனவும் வைத்தியர் பெல்லன தெரிவித்துள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக